பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரையேற்றும் உமையவள் 4}

  • எழுதா மறையின் - ஒன்றும் அரும்பொருளே, உமையே’

என்று பத்தாவது பாடலில் இந்தத் திருநாமத்தை வைத்திருக்கிருர். அதன் விளக்கத்தில் அந்த நாமத்தின் பெருமையை ஒரளவு பார்க்க முடிந்தது. -

'ஒன்ருகவும் பலவாகவும் அருவாகவும் உள்ள உமா தேவி நம்மை எப்படியும் காப்பாற்றுவாள்; ஆண்டு கொண்டவளுக்கு உரிய கடமை அது’ என்பதை நினைப் பூட்டிக் கொள்வதற்காக, என்னை ஆண்டு கொள்ளவில்லை என்று சொல்வது முறையா? என்ற கேள்வியைத் தோற்று

வித்துக் கொண்டார் இந்தப் பக்தர்.

அன்றே தடுத்துஎன்னே ஆண்டுகொண்

டாய்; கொண்டது அல்ல' என்கை நன்றே உனக்கு? இனி நான்எள் - -

செயினும், நடுக்கடலுள் சென்றே விழிலும், கரைஏற் றுகையின் திருவுளமே; ஒன்றே, பலஉரு வே, அரு

வே, என் உமையவளே!

(ஒருருவாக உள்ளவளே, பல உருவங்களை உடை யாய், உருவம் ஏதும் அற்ற அருவே, எனக்குத் தாயாகிய உமா தேவியே, முன் ஒரு நாள் அடியேனத் தடுத்த்ாட் கொண்டருளினை; அவ்வாறு ஆட்கொண்டதை அல்ல என்று மறுத்தல் உனக்கு நியாயமா? இனிமேல், அடியேன் என்ன பிழை செய்தாலும், கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும், என் குற்றத்தை மறந்து கரையேற்றிப் பாதுகாத்தலே நின் திருவுளப்பாங்குக்கு ஏற்ற செய வாகும். -