பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமேல்

அன்னேயின் திருநாமங்களில் ஒன்று, பூரீகண்டார்த்த சரீரினி' என்பது. பரமசிவனுடைய இடப்பாதியில் எம். பெருமாட்டி வீற்றிருக்கிருள். இந்த அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் இருவர் இருந்தாலும் ஒரு மூர்த்தியாகவே கொள்வார்கள். இருவரும் சேர்ந்த ஏக உருவம் அது. அந்த வடிவத்தைக் கண்டு, இந்த மூர்த்தியை ஒருமையாக வைத்துச் சொல்வதா? பன்மையாக வைத்துச் சொல்வதா? ஆண்பால் என்று சொல்வதா? பெண்பால் என்று சொல்வதா?' என்ற சந்தேகங்கள் இலக்கணப் புலவர் களுக்கு எழலாம். எப்படித்தான் சொல்வது? விடை கூறுவது கொஞ்சம் சங்கடமான காரியமே, -

இதைப்பற்றிக் குமரகுருபர சுவாமிகள் ஒர் அழகான பாட்டைப் பாடியிருக்கிரு.ர். இந்த மூர்த்தியை ஒருவன் என்று சொல்வதா? ஒருத்தி என்று சொல்வதா? நல்ல வேளை, இருபாலுக்கும் பொதுவாக ஒருவர் என்ற சொல் இருக்கிறது! அதையே சொல்லிவிட்வாம். அப்படி ஒரு சொல் இருப்பது எவ்வளவு உபயோகமாக இருக்கிறது!’ என்று அவர் மகிழ்ச்சி அடைகிருர், ஒருவர் என்ற சொல் பகுதியினல் ஒருமை; விகுதியினல் பன்மை. அதை வாக்கியத்தில் வைத்துச் சொன்னல் அது பன்மைக்குரிய பயனிலையோடு முடியும். ஒருவர் நிற்கிருர்' என்று.

சொல்லும்போது நிற்கிருர் என்பது சொல் உருவத்தால் பன்மை . -

"ஒருவர் என்பது உயர்இரு பாற்ருய்ப்

பன்மை வினைகொளும் பாங்கிற்று என்ப’’