பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமல முத்திரை

எத்தனை விதமாகப் பக்திசெய்தாலும், ஞானவிசாரம் செய்தாலும், செய்யவேண்டிய கர்மங்களேச் செவ்வனே செய்து வாழ்ந்தாலும் மனத்தில் நிறைவு உண்டாவதில்லை. இந்த வாழ்க்கையினிடையே வரும் துன்பங்களை ஒருவாறு பொறுத்துக்கொண்டு உறுதியாக நிற்கும் திறங்கூட வந்து விடலாம். ஆனல் இந்தப் பிறவியின் இறுதியில் மரணம் வருமே என்பதை எண்ணும்போது வயிறு பகீரென்றது. எவ்வளவு பெரியவர்களானலும் காலன் கைப்பாசத்தில் கட்டுண்ணுவோமே என்று கலங்குவர்ர்கள் யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன்' என்று மணி வாசகர் அஞ்சினர்; ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்' என்ருர் திருநாவுக்கரசர். -

இந்த உலகில் செல்வத்திலுைம் உடல் வலிமை யினுலும் அறிவாற்றலினலும் எவ்வளவோ காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். பலவகை இன்னல்களினின்றும் நீங்கி வாழலாம், ஆல்ை செல்வம், உடல் வலிமை, அறி வாற்றல் இவை யாவும் காலன்முன் சிறிதும் பயன்படாமல் ஒழிந்துபோகும். மகாபண்டிதர்களாக விளங்கினவர்களும் இறுதிக் காலத்தில் மரண வஸ்தையை அடைந்து இறந்து போயிருக்கிருர்கள். ஒவ்வொரு மனிதனும் அந்தத் துன் பத்தை உண்மையில் நினைந்து பார்த்தால் உள்ளீரலில் பற்றும். வேறு எந்தக் காரியமும் செய்யத் தோன்ருது.

இறைவனிடம் பக்தி உண்டாவதற்குப் பல காரணங் கள் உண்டு. ஆனல் அந்தப் பக்தி முறுகி நிற்க வேண்டு. மாளுல் யமபயம் உள்ளத்தில் இருக்கவேண்டும்.