பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மாலை பூண்ட மலர்

காலனிடத்தில் பயம் உண்டாகுல் காலகாலனிடத்தில் பக்தி: ஆழமாக ஏற்படும்.

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன்' -

என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் சொல்கிரு.ர். ஆவிக்குமோசம் வரும், காலன் வருவான் என்ற பயத்துடன் இறைவன் அடியைச் சேவித்தால் அப்போது பக்தி அழுத்த மாக இருக்கும். யாரேனும் பயமுறுத்தினுல் குழந்தை ஒடி வந்து தாயை இறுகப் பற்றிக் கொள்வதைப் போலவும், தலையில் தீப்பிடித்தவன் தண்ணீரை நாடி வீழ்வதுபோலவும் இந்த முறுகிய பக்தி இருக்கும்.

எனவே, நம் தலைமாட்டில் யமன் நிற்கிருன் என்ற உணர்வு நமக்கு இருக்கவேண்டும். அதனுல் பக்தி வரவர வைரம்போல முறுகும். அதனுடைய விளைவு வியத்தற். குரியது. இறைவனுடைய திருவருள் துண்ை கிடைத்து விட்டால் பிறகு யமனைப் பற்றிய கவலையே இராது. அவனுடைய நினைப்பே வராதது. பக்தி இல்லாதவர்களுக்கும் யமனுடைய நினைப்பு இருப்பதில்லை; அருள் பெற்றவர்களுக் கும் அந்த நினைப்பு இருப்பதில்லை. இது வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

"சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது

தான்வந்து முற்றுமென லால் சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பதைச் சதாநிஷ்டர் நினைவதில்லை' - என்று தாயுமானவரும்,

மரணப்ர மாதம் நமக்கில்லை யாம்என்றும் வாய்த்ததுணே, கிரகணக் கலாபியும் வேலும் உண்டே

என்று அருணகிரிநாதரும் பாடுகின்றனர்.