பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமல முத்திரை 55

இதே நிலையில் அவர்கள் இருக்கிரு.ர்கள். இதைத்தான் ஜீவன் முக்த நிலை என்பார்கள். இந்தச் சரீரத்தில் இருந் தாலும் சுகதுக்கமற்ற பேரானந்தப் பிராப்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. பிராரப்தம் காரணமாக உடல் இருக்கிறது. அது கழிந்த பிறகு முழுவிடுதலை பெற்று விதேக முக்தியை அடைகிருர்கள். ஜீவன் முக்த தசையில் இனிப் பிறப்பில்லை. என்ற உறுதியும் அதற்கேற்ற அநுபவமும் உண்டாகும்.

இத்தகைய நிலையை அபிராமிபட்டர் சொல்கிரு.ர். அம்பிகையின் அருளைப் பெருதபோது இருந்த ஆபத்தான நிலையையும், அப்பெருமாட்டியின் கருணைக்கு ஆளான பின்பு பெற்ற உயர்நிலையையும் சொல்கிருர், தாயே, அடியேன் ஆசைக்கடலில் அகப்பட்டுத் திரிந்துழன்று பல பிறவி எடுத்தேன். பிறகு இந்தப் பிறவி வந்தது. மற்றப் பிறவிகளைப்போல இதன் இறுதியிலும் மரணம் வந்து தலைப்படுவதாக இருந்தது. அந்தகன் கைப்பாசத்தில் அகப்பட்டு அல்லற்படும் நிலையில் இருந்தேன். அவ்வாறு இருந்த இந்த ஏழையை நீ ஆண்டுகொண்டாய்” என்று தொடங்குகிரு.ர். - -

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லல் பட இருந்தேனே. யமன் கருணையற்றவன். இன்னர் இனியார் என்று பார்க்கமாட்டான். காலம் வந்தால் பாசத்தை வீசி உயிரைக் கைக்கொண்டு போய்விடுவான். அந்த இரக்க மற்றவன் கையில் அகப்பட இருந்தவரை அம்பிகை காப் பாற்றினுள். எவ்வாறு காப்பாற்றினுள் என்பதை மேலே சொல்கிருர், -

வெளி நாட்டிலிருந்து பண்டங்களைத் திருட்டுத்தன மாகச் சிலர் கொண்டுவருவதுண்டு. நேர்மையாகப் பலர் கொண்டு வருவார்கள். சுங்க நிலையத்தில் நேர்மையாக வரி செலுத்தியவர்களின் பண்டங்களுக்கு முத்திரையிட்டு எடுத்துச்செல்ல அநுமதிப்பார்கள். அல்லாதவற்றைப்