பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமல முத்திரை $7

திக்கொண்ட உறவு. எல்லோருக்கும் பயனளிப்பதுபோன்றது அருள். இது அத்தகையது அன்று. அம்பிகை தானே. விரும்பி வந்து தன் தாளுக்கும் அன்பர் தலைக்கும் இணைப்பு ஏற்படுத்தி உறவாக்கிக்கொண்டாள். இனி அந்தத் தலை நிமிர்ந்து நிற்கும். -

இந்தப் பேரருளாகிய நேசத்தை எப்படி வருணிப்பது! வேறு யாரேனும் இப்படிச் செய்திருந்தால் உவமையாகக் கூறலாம். அதற்கும் வழியில்லை. ஆகவே, தாயே! இந்த நேசத்தை நான் எவ்வாறு வருணித்துக் கூறுவேன்!’ என்று அவசமாகிருர் இந்த அன்பர்.

எம்பெருமாட்டியின் அடையாளத்தைக் கடைசியில் சொல்கிரு.ர். பரமசிவனுடைய வாமபாகத்தில் நுட்பமான ஆபரணங்களே அணிந்துகொண்டு ஒன்றியிருப்பவள் எம்பெருமாட்டி. அவளுடைய திருவடி முத்திரை த லேயிற் பட்ட பிறகு காலன் பயம் ஒழிந்தது. இனி அந்தகன் கைப்பாசத்தில் அகப்படமாட்டோம் என்ற உறுதி வந்து விட்டது. - -

இவ்வாறு ஒரு பெரிய வாழ்வை, வலிந்து தடுத்து ஆட் கொண்டு, வழங்கிய அபிராமியின் பெருங்கருணையை வெளி யிட வார்த்தை ஏது? -

ஆசைக் கடலில் அகப்பட்டு அருள் அற்ற - அந்தகன் கைப் -

பாசத்தில் அல்லற் படஇருத் தேனை, நின்

பாதம் என்னும்

வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட

நேசத்தை என்சொல்லு வேன்! ஈசர் பாகத்து

நேரிழையே! -

(சிவபெருமானுடைய வாமபாகத்தில் எழுந்தருளியிருக் கும் நுட்பமான அணிகலன்களை அணிந்துள்ள தாயே,