பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் தவம்

அபிராமி பட்டருக்கு எத்தனை பெருமிதம்! தமக்குக் கிடைத்த பேறு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்று பெருமைப்படுகிருர்; எண்ணி எண்ணி உளம் பூரிக்கிரு.ர். "இந்தப் பேறு கிடைக்க என்ன தவம் செய்தேனே' என்பது கூட அகங்காரமாகிவிடும் என்று எண்ணினர் போலும்! இப்படி ஒரு தவம் எங்களுக்குக் கிடைத்ததே!’ என்று ஈடுபடுகிரு.ர். அது என்ன பேறு? *

அம்பிகை தன்னுடைய சிறிய அடியை அவருடைய சென்னியின்மேல் வைத்தாளாம். சென்னிய துன்பொற். றிருவடித் தாமரை” (6) என்று முன்னேயும் சொன்னர். அந்த அடியை அம்பிகையே திருவுள்ளம் குளிர்ந்து வந்து தலையில் வைத்தாளாம். அது பெருந்தவத்தின் பயன். அந்தத் தவம் எப்படி வந்தது? அதுவும் அம்பிகையின் அருளாலே கை கூடியது தான். அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று அடிக்கடி கேட்டிருக்கிருேம். தம்முடைய பெருமுயற்சி இல்லாமலே அம்பிகையின் அருளால் அந்தத் தவம் அவரை வந்து அடைந்ததாம். அது பெரிய வியப்பல்லவா? ஆ என்ன உயர்ந்த கருணை! 'தவம் எங்களை வந்து சேர்ந்தது. அது மிக மிக ஆச்சரியமானது."

சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா!

அடியார் கூட்டம் அத்தனையையும் மனத்தில் கொண்டு: பேசுகிருர் இந்த அன்பர்; எங்களுக்கு இப்படி ஒர் ஒப்பற்ற தவம் கிடைத்தவாறு என்னே! என்கிருர். அம்பிகை இவர் தலையில் வைப்பதற்கென்றே சிறிய அடியை உடைய