பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தொடர்ந்து இருபத்தாறிலிருந்து ஐம்பது வரையிலுள்ள பாடல்களுக்குரிய விளக்கக் கட்டுரைகளை, "மாலை பூண்ட மலர்' என்ற பெயருடன் இந்த இரண்டாந் தொகுதியாக இப்போது வெளியிடுகிறேன். இவை பூரீரங்கத்திலிருந்து வெளியாகும் சங்கர கிருபா என்ற மாதப் பத்திரிகையில் வெளியானவை. - - . . .

இந்தப் பாடல்களின் விளக்கக் கட்டுரைகளில் பல உவமைகளையும் எடுத்துக்காட்டுக்களையும் எடுத்து கூறிச் சமயக் கருத்துக்களை விளக்க முயன்றிருக்கிறேன். தேவாரம், திருவாசகம் முதலிய அருளாளர் நூல்களில் உள்ள கருத்துக்களை ஒப்புமையாகக் காட்டி இருக்கிறேன். அங்கங்கே லலிதா சகசிர நாமத்தில் வரும் திருநாமங்களே, யும் காட்டியுள்ளேன். ரீ வித்யா உபாசகராகிய அபிராமி பட்டருக்கு அந்தச் சகசிர நாமத்தில் ஈடுபாடிருந்ததலுைம், அம்பிகையின் பெருமையை அந்த நூல் பலபடியாகக் கூறு வதனலும் இந்தத் திருநாமங்கள் இந்நூலாசிரியரின் கருத் துக்கு அரண் செய்ய உதவுகின்றன.

இந்தப் பாடல்கள் தெளிவான நடையில் இருப்பதனல் உரை இல்லாமலே படித்துத்தெரிந்து இன்புறுவதற்குரியன. இதைப் பாடியவர் அருளாளர். ஆதலின் பல அநுபவ உண்மைகளை வெளியிட்டிருக்கிருர், அம்பிகையினிடம் இவருக்குள்ள உறுதியான பக்தியும், அம்பிகையின் பெருங் கருணைத் திறத்தை இவர் பாராட்டி வியக்கும் தகைமையும் தமக்குப் பக்குவம் குறைவு என்று சொல்லும அடக்க உணர் வும் அம்பிகையிடம் பக்தி கொள்வதனால் பலபல நன்மைகள் உண்டாகும் என்ற நம்பிக்கையும் இந்தப் பாடல்களால் புலனுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகை வழிபாட்டு நிலைகளிலும் நின்று பேசுகிருர் இந்த ஆசிரியர். அந்த அந்தத் துறையில் நிற்பவர்களுக்கு அந்த நிலையில் உள்ள பாடல்கள் மனத்தில் நன்கு பதிந்து உருக்கத்தை உண்டாக்கும். அதுடவாதிசயத்தைக் காட்டும் பாடல்கள் திருவாசகப் பாடல்களை நினைப்பூட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாலை_பூண்ட_மலர்.pdf/8&oldid=615477" இலிருந்து மீள்விக்கப்பட்டது