பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவ அதிசயம்

அம்பிகையின் திருவடியைப் பணிந்து அவளுக்கு அடியாரான பேற்றை நினைக்க நினைக்க அபிராமிபட்டருக்கு வியப்பு மீதுார்கிறது. அப்படி அடிமைப்பட்டதனால் உண்டான அநுபவத்தை எண்ணிப் பார்க்கிரு.ர். ஒன்றுக்கும் பற்ருத இந்த எளியவனுக்கு இத்தகைய அநுபவம் கிடைக்கும்படி செய்த மகாமாதாவின் திருவருளே என்ன வென்று சொல்வது!’ என்று வியக்கிரு.ர். அன்னையையே பார்த்து, 'அம்மா! உன் அருளின் வல்லபத்தை எவ்வாறு நான் அறிந்து சொல்ல முடியும்?' என்று உருகுகிரு.ர்.

அன்னை உலகத்துச் செல்வம் அத்தனையுமாக விளங்கு பவள்; எல்லாச் செல்வத்துக்கும் மேலான செல்வமாக நிலவுகிறவள். எல்லாப் பொருளுக்கும் மேலான பரம் பொருளே அவள்தானே? அவளைச் செல்வமே என்று அழைக்கலாம்; பரவஸ்துவே என்று துதிக்கலாம். எல்லாப் பொருளுமாக இருப்பவளே என்றும் சொல்லலாம் இவற்றை ஒருங்கே எண்ணும்படி, - -

பொருளே!

என்று தொடங்குகிருர் ஆசிரியர். அவள் செல்வமாக இருக்கிருள்; செல்வத்தை வழங்குகிருள்; வஸ்தோ (670) என்பது அன்னையின் திருநாமங்களில் ஒன்று. எல்லா மக்களுக்கும் செல்வத்தைக் கொடுப்பவள்” என்பது அதன் பொருள். :

பொருள் என்பதற்கு உண்மையென்றும் பொருள் உண்டு. அம்பிகை ஒருத்திதான் மெய்யாக உள்ள பொருள். . ιρfr&υ-6 . - .