பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாலை பூண்ட மலர்

தலின் மெய்ப்பொருளே என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். -

பின்னலே, பொருள் முடிக்கும் போகமே என்று வருவதால், செல்வமாக விளங்குபவளே என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். .

பொருள் அல்லது செல்வத்தால் உண்டாவது நுகர்ச்சி அல்லது போகம். வெறும் பொருளைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதல்ை அதற்கு மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பொருள் ஒரு காலத்தில் அதிகமாக மதிக்கப்பெறுகிறது; வேறு ஒரு காலத்தில் அத்தனை மதிப்பு அதற்கு இருப்பதில்லை. அந்தப் பொருளால் கிடைக்கும் போகத்துக்கு ஏற்ப அதற்கு மதிப்பு மாறுகிறது. ஒரு நாட்டில் செலாவணியாகும் நாணயம் மற்ருெரு நாட்டில் செல்லுவதில்லை. அங்கே பொருள் இருந்தும் போகம் இல்லை. அம்பிகை பொருளாக இருக்கிருள்; அந்தப் பொருளால் நிறைவேற்றிக்கொள்ளும் போகமாகவும் விளங்குகிருள். அவளுக்கு மஹாபோகா (219) என்பது ஒரு திருநாமம்.

பொருள் முடிக்கும் போகமே!

  • முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னல் முடியும்' என்று திருக்கோவையார் கூறும். போகத்தைப் பொருள் தான் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் ஆகவே, பொருள் முடிக்கும் போகமே என்ருர்.

பொன்ஞனுய் மணியா குய்போக மானுய்

என்று அப்பர் சுவாமிகளும் இறைவனப் பொருளாகவும் போகமாகவும் போற்றுகிரு.ர்.

மிக்க போகத்தில் ஈடுபட்டவர்களுக்கு அந்தப் போகமே உண்மையானது என்ற மயக்கம் உண்டாகும். நிலேயர்த