பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவ அதிசயம் 83

வற்றை நிலையுள்ளன என்று கருதும் இயல்பை மருள் என்றும் மாயை என்றும் கூறுவார்கள்.

'பொருளல்ல வற்றைப் பொருளென் றணறும் மருள்” என்பது திருக்குறள், இவ்வாறு உண்டாகும் மயக்கத்தின் உருவாகவும் அன்னை இருக்கிருளாம்.

அரும் போகம் செய்யும் மருளே!

அம்பிகைக்கு மஹாமாயா (215) , மாயா (7.19), ஸ்ர்வ மோஹினி (703) என்றுள்ள திருநாமங்கள் இத்தகைய மயக்கத்தையும் மறைப்பையும் உண்டுபண்ணுபவளும், அந்த மாயையாகவே இருப்பவளும் அவளே என்பதைப் புலப்படுத்துகின்றன. -

அவ்வாறு மயங்கிய ஆன்மாக்கள் அந்த மயக்கத் தினின்றும் நீங்கித் தெளிவை அடைகின்றன. அந்தத் தெளிவையும் அவளே உண்டாக்குகிருள்; அந்தத் தெளிவே தானக அவள் இலங்குகிருள், . -

மருளில் வரும் தெருளே!

அவித்தையாகிய மருளைப்போக்கித் தெளிவை உண் டாக்குவதனுல் அம்பிகைக்கு விஞ்ஞானகலன (902) என்ற திருநாமம் உண்டாயிற்று. குழந்தையின் ஆசையை அறிந்து அது கேட்கிற உணவைக் கொடுத்துவிட்டு, அதளுல் குழந்தைக்கு மந்தந் தட்டி நோய் வந்தால், அதை மாற்ற மருந்தும் வாங்கித் தருகிருள் தாய். இரண்டும் அவளுக்குக் குழந்தையினிடம் உள்ள அன்பினல் விளையும் செயல் களாம். உலகன்னேயாகிய அபிராமியும் தன் குழந்தை களின் ஆசைப்படியே போகமாக நின்று நுகரச்செய்து, அதன் விளைவாக மருளே உண்டாக்கி, அப்பால் அது தெளியத் தெளிவு தந்து, அந்தத் தெளிவாகிய ஞானமே தன்னுடைய உருவாக விளங்குகிருள்.