பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - மாலை பூண்ட மலர்

இத்தகைய அன்னையை உள்ளத்தில் வைத்துத் தியானம் செய்தவர் அபிராமிபட்டர். பல காலம் அன்னையைத் தியானம் பண்ணிய பழக்கத்தினல் அவருடைய உள்ளத் தில் அம்பிகை சுடர்விட்டு விளங்குகிருள்.

நம்முடைய மனத்தில் என்ன இருக்கிறது? கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் ஒரே இருட்டைத்தான் காண் கிருேம். நம்முடன் இருக்கும் மனம் நமக்கு எதையும் காட்டாமல் இருட்டுத் திரை போட்டு விடுகிறது. அந்த இருள் திரையைக் கிழிக்க நமக்குத் திறமை இல்லை. ஒளி வந்தால்தான் இருளே ஒட்டமுடியும். விளக்கைத் தேடிப் பெற்று அதைக் கொண்டுவந்து மனத்துக்குள் வைக்கும் வழி தெரியவில்லை. உலகத்திலுள்ள எதை எதையோ கொண்டு - வந்து மனத்துக்குள் வைத்துக்கொள்கிருேம்; அவற்றையே நினைத்துக் கொண்டிருக்கிருேம். அதனல் நம்மை அறி யாமல், நமக்குத் தீமையையே தரும். இந்த இருட்டு. மனத் துக்குள்ளே புகுந்து போகமாட்டேன் என்கிறது. -

இந்த இருட்டைப் போக்கும் விளக்கு இன்னதென்று தெரிந்துகொள்ள வேண்டும். அதை உள்ளத்தே கொண்டு. வந்து வைக்க வேண்டும் அம்பிகையே அந்த விளக்கு.

"அகந்தைக் கிழங்க்ை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே’’

என்று குமரகுருபரர் மீட்ைசியம்மையைச் சொல் கிரு.ர். அன்னையாகிய விளக்கைக் கொண்டுவந்து அகத்தே வைத்தால் அங்குள்ள நல்ல பொருள்களும் அல்லாத. பொருள்களும் தெரியும். நல்ல பொருள் சிறிதும் இல்லை. என்ற உண்மை தெரியவரும். அப்போது தீய பொருள்களை ஒவ்வொன்ருக வெளியே தள்ளிவிட முயல்வோம். நாளடைவில் எல்லா அழுக்குகளையும் ஒழித்துவிட முடியும்.