பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவ அதிசயம் - 85

அதற்குள் விளக்காக இருந்த அன்னை சுடராக விரிந்து சோதியாகப் பரந்து நிற்பாள். அப்போது கண்ணே முடிக் கொண்டால் ஒரே ஒளிமயமாகத் தோன்றும். ஒரு சிறு புள்ளியளவு மாசும் இல்லாமல், அவள் நான் என்ற வேறு பாடும் இல்லாமல் அந்த ஒளி வெள்ளத்தில் மூழ்கி நம்மை மறந்து நிற்போம். - .

தெருள் பெற்றவர்களுக்கு, தம்மை அறியாமல் புகுந்து கொண்ட வஞ்சக இருள் ஒழிந்துபோக, ஒரே ஒளி நிரம்பிய ஆகாசமாக, ஒளி வெளியாக, அம்பிகை காட்சி அளிப்பாள். அப்போது உண்டாகும் ஆனந்தத்துக்கு அளவு ஏது? எல்லாம் மறந்து நாமே அந்த ஒளி வெள்ளமாகிவிடுவோம். இந்த அநுபவத்தை அம்பிகை தருகிருளாம். -

பக்தனிடம் பரம கருணைகொண்டு இந்த அநுபவத்தை உண்டாக்குகிருள் அன்னே. அந்தக் கருணையை எப்படி மதிப்பிடுவது? அதற்கு உவமை ஏதாவது உண்டா? அந்த அருளால் விளைந்த அநுபவம் எப்படி வாக்கினல் அளவிட்டுச் சொல்லமுடியாதோ, அவ்வாறே அந்த அருளையும் சொல்ல முடியாது. - -

என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி

இருக்கும் உன்றன் அருள் ஏது? அறிகின்றிலேன்

என்று, சொல்லமுடியாமல் திணறுகிருர் ஆசிரியர். 'உன் ஆணுடைய இந்த அருள் எத்தகையது? எனக்குச் சொல்லத்

தெரியவில்லையே! என்று அவர் உருகுகிருர்; ”

அம்பிகையின் திவ்யதேஜோமய லாவண்யம் கங்கு கரை இல்லாத கடல். உருவநிலையினின்றும் மாறி அலையற்ற ஜோதி வெள்ளமாகி, கரையற்ற ஜோதிக்கடலாகி நிற்கும்