பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - மாலை பூண்ட மலர்

(எட்டுத் திக்குகளையே தான் அணியும் அழகிய ஆடையாகக் கொண்ட இறைவனுடைய இடப்பாகத்தைச் சேர்ந்து எழுந்தருளியிருக்கும் அன்னை தன் கையில் அணிந்துகொண்டிருப்பவை கரும்பும் மலர்களும்; அப்பெரு மாட்டி தன் திருமேனியில் அணிந்திருப்பது தூய வெள்ளே யான முத்துமாலை; நஞ்சையுடைய பாம்பின் படம் போன்ற இரகசியத் தானத்தில் அணிபவை பலமணிக் கோவை களாலான மேகலையும் பட்டும் ஆகும். .

கைக்கே அணிவது, பைக்கே அணிவது என்னும் இரண்டிடங்களிலும் இரண்டிரண்டு பொருள்களைப் பின்னே சொல்வதனால் அணிவன என்று இருக்க வேண்டும்; அணிவது என்று ஒருமையாக இருப்பதைத் தொகுதி ஒருமை என்று கொள்ளவேண்டும். கன்னல்கரும்பு. பை-படம். விட அரவின் பை என்றது அடை யடுத்த ஆகுபெயர்; அம்பிகையின் கடிதடத்தைக் குறித்தது. பன்மணிக்கோவை என்றது மேகலையை; இது அன்மொழித்தொகை. திரு உடை-அழகிய ஆடை. திருவை உடையான் என்று கொண்டு, எட்டுத் திக்குக் களையே ஆடையாக அணியும் செல்வச்சிறப்பை உடை யவன் என்றும் பொருள் கொள்ளலாம். செல்வர்கள் நீண்ட ஆடைகளை அணிவது வழக்கம். அளவு காணுத திசைகளையே ஆடையாக அணிவதனால் அவன் திருவுடை யாளுளுன். சேர்பவளே: ஏகாரம் அசை, சேர்பவளே என்பதை விளியாகக் கொண்டு, நின்கையில் அணிவது' என்று பொருள் கொள்வதும் ஒரு முறை. х

இது அபிராமி அந்தாதியின் 37-ஆவது பாட்டு.

حسہدی چیحG03تمکمیجچیہ--