பக்கம்:மாவிளக்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மா விளக்கு

" சரி சரி, இப்போ எல்லாம் விளங்கிவிட்டது. ஆளுல், அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுத்ததுதான் யாரென்று இன்னும் நிச்சயமாகவில்லே ' என்று சப்-இன்ஸ்பெக்டர் புன்னகையோடு சொன்னர்.

" அது கானல்ல. அவன்தான் ஸ்ார் ' என்று அனுபவமூர்த்தி ஒப்புக்கொண்டான்.

" நீயே இழுத்ததாக முன்னுல் சொன்னயே ?”

" திருடன் மேலே குற்றம் கன்ருக ஏற்படட்டும் என்றுதான் அப்பொழுது கற்பனை செய்தேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள்.”

‘ எழுத்தாளருக்கு வேண்டிய கற்பனையெல்லாம் உங்களிடம் கன்ருக இருக்கத்தான் செய்கிறது ' என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் உரக்கச் சிரித்தார்.

அவர்கள்மீது கேஸ் ஒன்றும் எடுக்கப்படா விட்டாலும் ரயிலே அவைசியமாக நிறுத்தியதற்கு அபராதம் கொடுக்கவேண்டி ஏற்படலாம் என்றும், கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் எச்ச ரிக்கை செய்தார். அபராதம் எவ்வளவாலுைம் கொடுத்துவிடத் தயாரென்றும், அவசியமானபோது ஆஐராவதாகவும் வாக்குக்கொடுத்துவிட்டு, அதோடு இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கக் கூடாதென்றும் அவர்கள் மன்ருடிக் கேட்டுக் கொண்டார்கள். சப்-இன்ஸ்பெக்டர் சம்மதம் தெரிவித்ததோடு போவதற்கு அனுமதியும் தந்தார். சுயதரிசனமும், அனுபவமூர்த்தியும் தோள்மேல் தோள் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/108&oldid=616205" இலிருந்து மீள்விக்கப்பட்டது