பக்கம்:மாவிளக்கு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மா விளக்கு

அவள் தன்னேயே மறந்தவள்போல் கின்றுகொண் டிருந்தாள். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவளைச் சோதித் தார். கடிதம் ஒன்றும் அகப்படவில்லே. பிறகு அவர் திருப்தியோடு, ! உம் போகலாம் ' என்ருர்.

இருவரும் மெளனமாக வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். அங்கே வாடகை மோட்டார் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆண்டாள் சின்னசாமியை அதிலே ஏறும்படி சமிக்கை செய்துவிட்டுத் தானும் ஏறிக்கொண் டாள் ; மோட்டார் புறப்பட்டது.

சிறிதுநேரம் இருவரும் பேசவில்லை. மோட்டார் பறந்து கொண்டிருக்கிறது. கடைசியாக, ' நாம் எங்கே போகிருேம் ' என்ருன் சின்ன்சாமி.

“ இன்னும் பத்து நிமிஷத்தில் மதுரைக்குப் புறப் படுகிற வண்டிக்கு ' என்ருள் ஆண்டாள்.

சின்னசாமி பெருமூச்சு விட்டான். ' என்னல் உங்களுக்கு வேலே ப்ோயிற்றே !’ என்று ஆண்டாள் இரக்கப்பட்டாள்.

" வேலே போனுல் போகிறது ; ஆல்ை, உனக்கு உதவிசெய்ய முடியவில்லேயே t' என்று அவன் கவலே யோடு கூறினன்.

ஏன், உங்கள் சட்டைப் பையைப் பாருங்கள் ' என்று ஆண்டாள் கூறிப் புன்னகை செய்தாள்.

சின்னசாமி பையில் கைவிட்டான் ; அங்கு மூன்று கடிதங்கள் ஒன்ருகக் கட்டப்பட்டுக் கிடந்தன.

இவையே நான் வேண்டிவந்த கடிதங்கள் 33 என்ருள் ஆண்டாள். அவள் கண்களில் வெற்றி விளை யாடியது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/118&oldid=616226" இலிருந்து மீள்விக்கப்பட்டது