பக்கம்:மாவிளக்கு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம்

எனது பழையகாட்குறிப்பு கோட்டுப்புத்தகத்தைத் திருப்பிப் படிப்பதில் எனக்கே உத்சாகம் கிடையாது. அத்தனை சுவையுள்ள விஷயங்கள் அதில் ஒன்றுமில்லை. இன்று மத்தியான்னம் சாப்பிட்டுவிட்டு 5 மணி வரையில் தூங்கினேன். இன்று கம்ப ராமாயணம் படிக் கலாமென்று நினைத்தேன், ஆனால் முடியவில்லேஇன்று சினிமாவுக்குப் போனேன் -இந்த மாதிரி குறிப்புக்கள்தான் அநேகமாக எந்தப் பக்கத்தில் பார்த் தாலும் இருக்கும். இவற்றைப் படிப்பதில் எழுதிய வனுக்கே சலிப்புத் தட்டுவதில் என்ன ஆச்சரியமிருக் கிறது ? ஆல்ை, 1944-ஆம் ஆண்டில் ஒரு மூன்று, நான்கு மாதங்களுக்கு எனது நாட்குறிப்பில் ஒரு முக்கிய விஷயம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது எல்லோ ருடைய உள்ளத்தையும் கவரும் என்ற கம்பிக்கையால் தான் அதை அப்படியே, சில்லறை விஷயங்களே ஒதுக்கி விட்டு, இங்கு தருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/120&oldid=616230" இலிருந்து மீள்விக்கப்பட்டது