பக்கம்:மாவிளக்கு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம் 1 19

அது என் கண்பன் குமரேசனப் பற்றியது. அவன் எப்பொழுதும் கனவுலகத்தில் இருப்பவன். உலகம் இப்படி மாற வேண்டும், அப்படி மாற வேண்டும் என்று வானளாவிய திட்டங்கள் வகுப்பவன் ; ஆகாயக் கோட்டை கட்டுபவன் ; அதே சமயத்தில் சிறந்த விஞ்ஞான அறிவும் படைத்தவன் , தத்துவக் கலைஞ - ساة تلة هي

நண்பர்கள் கோஷ்டியிலே அவனே எல்லோரும் கிறுக்கன் என்று கேலி பண்ணுவார்கள். அதை அவன் பொருட்படுத்தவே மாட்டான். உலகத்தில் தோன்றிய ஒவ்வொரு மகானேயும் கிறுக்கன் என்றுதான் முதலில் உலகம் நினைத்தது ' என்று சொல்லி அர்த்த புஷ்டியோடு நிறுத்தி விடுவான். -

எல்லோரும் அவனேக் கேலி செய்தாலும் எனக்கு மட்டும் என்ன அறியாது அவன்மேல் ஒரு வாஞ்சை யுண்டாகி வளர்ந்து வந்தது. ஆதலினலே தான் அவன் தனது ஆராய்ச்சிகளையும், கனவுகளேயும் என்னுடன் தாராளமாகச் சொல்லுவான் ; நானும் கேட்பேன்.

இச்சிறு முகவுரையோடு நான் எனது நண்பனப் பற்றி நாட்குறிப்பில் எழுதி வைத்திருப்பதை இங்கு தருகின்றேன். : -

1-3-44 காலே பத்து மணி இருக்கும்; குமரேசன் வந்தான்.

“ இப்பொழுது தோன்றியிருக்கிற இந்தப் பயங்கர யுத்தம் மக்களுக்குச் சொல்ல முடியாத துன்பத்தைத் தந்தாலும் உலகத்திற்கு ஒரு பெரிய நன்மையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/121&oldid=616232" இலிருந்து மீள்விக்கப்பட்டது