பக்கம்:மாவிளக்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மா விளக்கு

முடியப் போகின்றது ” என்ருன். இது அவனுடைய உறுதியான நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் பேரில் தான் அவன் தனது ஆராய்ச்சியைச் செய்து வந்தான்.

" யுத்தமாவது நன்மையாக முடிவதாவது போன மகா யுத்தம் சாதித்தது போலத்தான் ” என்று வழக்கம் போல் இன்றும் ஆரம்ப கீதம் பாடி வைத்தேன்.

அவன் உடனே தொடங்கிவிட்டான் : “ அப்படி ே நினைக்கவே படாது. போன யுத்தம் ஒரு கன்மையும் உண்டாக்கவில்லை என்று:சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மையல்ல. எதிர்பார்த்த அளவு நன்மையைக் 'கொடுக்கவில்லே, அவ்வளவுதான். மேலும் அந்த யுத்தம் முடிந்த பிறகு செய்த தவறுகளே யெல்லாம் இன்று மக்கள் அறிந்து கொண்டார்களே.'

“ ஆமாம் ; மறுபடியும் அதே தவறுகளேச் செய்ய மாட்டார்களென்று எப்படிச் சொல்ல முடியும் ?”

“ இப்பொழுது படுகிற கஷ்டமே மறுபடியும் அவற்றைச் செய்ய விடாது. மனிதன் தவறு செய் கிருன் , வாஸ்தவந்தான் ; ஆல்ை, அதிலிருந்து பாடமுங் கற்றுக்கொண்டு முன்னேறுகிருன். இதில் எனக்குப் பரிபூர்ண நம்பிக்கை இருக்கின்றது.” - " சரி, இந்த யுத்தத்தின் முடிவு என்னதான்

ஆகுமென்கிருய் ?”

" இந்த யுத்தத்திற்குப் பிறகு உலகத்திலுள்ள மக்களெல்லோரும் தாங்கள் ஒரு பெரிய அழகிய இன்பக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்வார்கள். அடிமை யென்று ஒரு ஜாதியும் இருக்காது. எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/122&oldid=616234" இலிருந்து மீள்விக்கப்பட்டது