பக்கம்:மாவிளக்கு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மா விளக்கு

' அதைப்பற்றித் தான் சொல்லப் போகிறேன். அதற்கு முதலில் காலத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள வேணும்.”

இந்த இடத்தில் பேச்சுத் தடைப்பட்டது. மற்ற நண்பர்கள் வந்து விட்டார்கள்.

எல்லோரும் உலாவப் புறப்பட்டோம். 5-3-44 : நாள் முழுவதும் படுத்துக் கொண்டே யிருந்தேன். பட்டணம் போய் வந்த அலுப்பு. அப்பா, இந்த ரயில் பிரயாணத்த்ை நினைத்தால் பயமாக இருக் கிறது.

மாலையில் குமரேசன் வந்தான். படுத்துக்கொண்டே எதையாவது பேச வேண்டுமென்று இஷ்டமா யிருந்தது எனக்கு அன்று விட்டுப்போன பேச்சை ஆரம் பித்தேன்.

' ஆமாம், உன்னுடைய யந்திரத்தைப் பற்றிச் சொல்லுகிறேனென்ருயே -ேஅது என்ன யந்திரம் ??

" அதுதான் கால யந்திரம் இறந்த காலத்திலும், எதிர் காலத்திலும் செல்லக் கூடியது.”

" அதெப்படிப் போக முடியும் : இறந்த காலத் திற்குள்ளே இப்பொழுது போகமுடியுமா ?”

போக முடியுமென்றுதான் நான் கம்புகிறேன். நீளத்திலும், அகலத்திலும், உயரத்திலும் போகி ருேமோ இல்லையோ-அது போலத்தான் இதிலும்.”

' அவற்றிற்கும் இதற்குமென்ன சம்பந்தம் ? அவற்றில் போக முடிந்தால் காலத்திலும் போக முடியு மென்று எப்படிச் சொல்வது பூமிக்கு மேலே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/124&oldid=616238" இலிருந்து மீள்விக்கப்பட்டது