பக்கம்:மாவிளக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 11

துழைகிறபோது விம்மி விம்மி மனேவி அழுதாளே அந்த உருவத்தைத்தான் அவன் அடிக்கடி கற்பனை செய்து கொள்வான். அவளே நினைக்கிறபோதெல்லாம் முத்து சாமியின் உள்ளம் குமுறும். அவளோடு தன்னை வாழ விடாமல் ஜெயிலுக்கோட்டிய வேலுச்சாமிக் கவுண்டரின் மேல் கோபம் பொங்கியெழும் பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரம் கொந்தளிக்கும்.

முத்துசாமி தன் குடும்பத்தைப்பற்றி நினைத்துக் கொண்டு உள்ளுக்குள்ளே குமுறும்போது கிழவன் பேசமாட்டான். அந்தச் சமயத்திலே பேசில்ை முத்து சாமியின் கோபம் அதிகமாகுமென்று அவனுக்குத் தெரியும். பலமுறை ஏற்பட்ட அனுபவத்தால் தெரிந்த விஷயம் அது. அவன் மெளனம் சாதித்தான்.

அதற்குமேல் அவர்கள் இருவரும் தனித்துப் பேச சமயம் வாய்க்கவில்லை.

முத்துசாமியை மறுநாள் விடுதலே செய்து விட்டார்கள். இரவு பதினெரு மணிக்கு மேல் எல்லோரும் உறங்கும் நேரத்திலே தன் சொந்த ஊரான காட்டுப்பாளையம் போய்ச் சேரவேண்டும் என்பது அவனுடைய உத்தேசம். யார் கண்ணிலும் படாமல் அவன் தன் தீர்மானத்தை நிறைவேற்ற எண்ணி யிருந்தான். அதற்கு ஏற்றமாதிரி கோயம்புத்துாரி லிருந்து ஒரு ரயிலில் ஏறி இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஊர் போய்ச் சேர்ந்தான்.

முத்துசாமி நேராக வீட்டுக்குப் போகவில்லை. வேலாங்காட்டுக்குத்தான் முதலில் போனன். வேலா மரம் நிறைய இருந்ததால் அதற்கு வேலாங்காடு என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/13&oldid=616012" இலிருந்து மீள்விக்கப்பட்டது