பக்கம்:மாவிளக்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மா விளக்கு

யாரும் அவனே அடையாளம் கண்டுகொள்ளவில்லே என்ருலும் அவனே ஒரு தனவந்தன் என்றுதான் மதிக் கிருர்கள். ஒரு பணக்காரன் தன்னந்தனியனக கடந்து போகக் காரணமென்ன வென்று அவர்களுக்கு ஆச்சரியம். அவன் சொத்தையெல்லாம் இழந்து விட்டான் என்பதையும், அந்தத் தோற்றமும், உடையுமே மீதி என்பதையும் அவர்கள் அறிவார்களா ?

கமலநாதனுக்கு அவர்களுடைய ஆச்சரியம் விளங் காமலில்லை. இருந்தாலும் அவன் என்ன செய்ய முடியும் யாருடைய பார்வைக்கும் அகப்படாமல் செல்ல வேண்டுமென்று அவன் வேகமாக கடந்தான். ஆல்ை, மனச் சோர்வினல் சீக்கிரம் களேப்பு ஏற்பட்டது. வீதியின் கோடியிலே ஒரு முச்சக்தி உண்டு. அந்த இடத்திலே நகரபரிபாலன சபையார் ஒரு சிறு பூங்கா ஏற்படுத்தியிருந்தார்கள். அங்கே கிடந்த ஒரு பெஞ்சி யில் கமலநாதன் அமர்ந்து யோசனை செய்யலான்ை.

அக்திச் சூரியன் வெகு அழகாக வான விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்தான். காவி நிறமான மகரந்தத் து.ாள் எங்கும் படர்ந்ததுபோல மேல்வானம் காட்சி யளித்தது. வெண் மேகமெல்லாம் அந்தச் செங் குழம்பிலே தோய்ந்து சிவப்பேறிவிட்டன. ஆதலால் அவற்றைத் தழுவிப் பிரதிபலித்துவரும் பொற்கிரணங் களும் உலகத்திற்குப் புதியதொரு மோகனச் சோபை யைக் கொடுத்தன. பூங்காவிலுள்ள சிறு மரங்களில் பறவைகள் அரட்டையடித்துக் கொண்டிருந்தன.

கமலநாதனுடைய கண்களில் இவையெல்லாம் i-Jiவில்லை. அவனுக்கு எல்லாம் இருண்டு தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/138&oldid=616269" இலிருந்து மீள்விக்கப்பட்டது