பக்கம்:மாவிளக்கு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தியாசம் 1.39

நான்கைந்து வருஷம் செய்த பிறகு முன்பிருந்த துணிச்சலும் மறைந்துவிடுகிறது. கையிலே கொஞ்சம் காசு மீதியானலும் அதன் மூலம் துணிவுண்டாகும். மாதச் சம்பளம் அந்த மாதத்திற்கே தொட்டுக்கொள் துடைத்துக்கொள் என்றிருந்தால் எப்படி மீதம் செய்வது ? முருகேசனுக்கு ஒரு இருநூறு ரூபாய்தான் தேவை. அந்தத் தொகை கிடைத்தால் அவனுடைய கனவு பலிதமாய்விடும். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஆசைதானுண்டு. அதாவது, ஒரு சின்னப் பெட்டிக் கடை வைப்பது. வெற்றிலே பாக்கு, பீடி, சிகரெட், மிட்டாய் தினுசுகள், இரண்டு குலே வாழைப் பழம், இன்னும் சில சில்லரைச் சாமான்கள்-இவைகளே அதில் வைத்து வியாபாரம் செய்தால் தினம் குறைந்தது கான்கைந்து ரூபாய் லாபம் கிடைக்கும். சில வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகைகளுக்கும் ஏஜன்சி, ஏற்பாடும் செய்து கொள்ளலாம். அவற்றின் மூலமும் கொஞ்சம் வரும்படி உண்டாகும். மாதத்திற்கு என்ன இருந்தாலும் நூற்றைம்பது ரூபாயுக்கு மோசமில்லை. வாத்தியாராக இருந்துகொண்டு அத்தனை பணத்தையும் ஒருங்கே கண்ணில்ை பார்க்கவும் முடியுமா ? பணத் திற்கு மேலே அந்தச் சுதந்திரம் இருக்கிறதே அது ஜில்லா போர்டு உத்தியோகத்தில் கிடைக்குமா ? எத்தனை ஜில்லா போர்டு அங்கத்தினர்களுக்குச் சலாம் போடுவது ? அந்த ஜூனியர் டிபுடி இன்ஸ்பெக்டர் இருக்கிருரே-அவரைகினத்தால்தான் முருகேசனுக்குச் சிம்ம சொப்பனம். அந்த அவஸ்தையிலிருந்து எப்படி யாவது விடுபடவேண்டுமென்பதே அவன் பேராவல்.

ஆல்ை அதற்கு ஒரு இருநூறு ருபாய் வேண்டுமே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/141&oldid=616275" இலிருந்து மீள்விக்கப்பட்டது