பக்கம்:மாவிளக்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தியாசம் 141

முதல் வழக்கிலேயே வெற்றியும் கிடைத்தது. நல்ல பீசும் கிடைத்தது. தனது ஆரம்ப ஆசிரியரை கினைத்துக் கொண்டான். என்னவோ அவனுக்கு அவர்மேல் ஒரு விசுவாசம். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை அவருக்கு அனுப்பின்ை.

அதைத் தனது கிழிந்த சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு முருகேசன் உற்சாகமாக அங்கு வந்து அமர்ந்தான். அவனுடைய கனவு பலிக்கும் தருணம் வந்துவிட்டதாகையால் அவன் குது.ாகலமாக இருக்கிருன். அவனுக்கு உலகம் அழகாகத் தோன்றியது. ஆகா, சூரிய அஸ்தமனம் எவ்வளவு வனப்பாக இருக்கிறது !' என்று மகிழ்ச்சியோடு சொன்னன்.

கமலநாதனுக்கு அப்படித் தோன்றவில்லை. அவன் பெருமூச்சு விட்டான்.

அதோ பறவைகளேப் பாருங்கள். எவ்வளவு களிப்போடு பேசிக்கொண் டிருக்கின்றன என்ருன் முருகேசன். -

' களிப்போ, விசனமோ நமக்கு எப்படித் தெரியும் ? இந்த உலகத்திலே களிப்படைவதற்கு என்ன இருக் கிறது ? என்று பதில் பேசின்ை கமலநாதன்.

நீங்கள் அப்படி நினைக்கப்படாது. உலகமே இன்பந்தான்.”

கையிலே காசிருந்தால் இன்பங்தான். இல்லாது போளுல் ? -

காசு ஒன்றும் நிறைய வேண்டியதே இல்லை. சந்தோஷமாக வாழ்க்கை கடத்துவதற்குக் கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/143&oldid=616279" இலிருந்து மீள்விக்கப்பட்டது