பக்கம்:மாவிளக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மா விளக்கு

கூட அவளுக்கு இஷ்டமில்லே. அந்த அறையிலே டெலி

போனுக்குப் பக்கத்திலேயே கட்டிலேப் போட்டுக்

கொண்டு படுத்திருக்கிருள்.’

டெலிபோனுக்குப் பக்கத்திலா ?

ஆமாம் ; இன்னொரு வேடிக்கை தெரியுமா ? உன் வீட்டு டெலிபோன் கம்பரைக் கொட்டைகொட்டையாக ஒரு அட்டையிலே எழுதி என் வீட்டு டெலிபோனுக்குப் பக்கத்திலே மாட்டிவிட்டு வந்திருக்கிருள். அம்மா ளுடைய ஆவி வீட்டுக்கு வந்ததும் இவளுக்கு இங்கே டெலிபோன் செய்யுமோ என்னவோ ?

சரிதாண்டா, உன் கேலியும் நீயும். நீ போய் அவ - ளுக்குத் தைரியமுண்டாகும்படி ஏதாவது பேச்சுக் கொடு. இந்தச் சமயத்திலே கமலம் இல்லாமல் போய் விட்டாளே, அவள் இருந்திருந்தால் மைதிலிக்கு இன்னும் தைரியமாக இருக்கும். நீங்கள் வருகிற விஷயம் தெரிக் திருந்தால் அவளே ஊருக்கு அனுப்பாமல் நிறுத்தி யிருப்பேன்."

சாயங்காலம் ஆபீசிலிருந்து வந்த பிறகுதாண்டா இங்கே வருவதாக முடிவு செய்தேன். அவள் படுகிற அவஸ்தையைப் பார்த்துவிட்டுத்தான் சட்டென்று இந்த எண்ணம் எனக்கு வந்தது. உடனே உனக்கு டெலி போன் பண்ணினேன்.”

  • நல்லவேளை, கடைசிநேரத்திலாவது, உ ன க் கு நல்ல புத்தி வந்ததே. இல்லாவிட்டால் மைதிலி இரவெல்லாம் தரகவேதனைப் பட்டிருப்பாள் ; சரி நீ இப்போ போய் அவளேக் கவனி.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/24&oldid=616034" இலிருந்து மீள்விக்கப்பட்டது