பக்கம்:மாவிளக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெலிபோன் மணி 23

மேலும் பேச்சுக் கொடுக்க விரும்பாதவன் போல சோமசுந்தரம் எழுந்தான். கமலகாதனும் தன் மனேவி மைதிலி படுத்திருந்த அறையை கோக்கி கடந்தான். அது படுக்கையறைக்காக ஏற்பட்டதல்ல. இருந்தாலும் டெலி போன் அந்த அறையில் இருந்ததால் அங்கேயே படுக்க வேண்டுமென்று மைதிலி விரும்பியதால் அங்கு இரண்டு கட்டிலேப் போட்டிருந்தார்கள்.

மைதிலி டெலிபோனுக்கு அருகிலேயே படுத்திருக் தாள். அவள் தூங்கவில்லே ; ஆல்ை, கண்களே மூடிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருந்தாள்.

கேட்டை கட்சத்திரத்தில் இறந்தவர்கள் பேயாகச் சில காலம் திரிவார்கள் என்றும், அந்த கட்சத்திரம் மீண்டும் வரும்போது அவர்கள் வசித்திருந்த வீட்டிற்கு வருவார்கள் என்றும் அவள் பல தடவை கேள்விப் பட்டிருக்கிருள். கிராமத்துச் சூழ்நிலையிலே வாழ்ந்த அவளுக்கு அதிலே ஆழ்ந்த கம்பிக்கை யிருந்தது. சென்னைப் பட்டினத்தில் ஐந்தாறு வருஷங்கள் வசித்த பிறகும் அந்த நம்பிக்கை மாறிவிடவில்லே. பட்டினத்தில் மட்டும் மக்களுக்குப் பேயென்ருல் பயம் இல்லையா என்ன ?

மைதிலி தன் மாமியாரிடம் கடந்து கொண்ட விதத்தையெல்லாம் எண்ணிப் பார்த்தாள். அவர் களுடைய மனம் புண்படும்படியாக நான் அப்படி யொன்றும் கடந்ததில்லே. இருந்தாலும் என்மேல் மாமி யாருக்குக் கோபம் இருக்கலாம். யார்கண்டார்கள் ? சாவ தற்குச் சில நாட்களுக்கு முன்பு கூடச் சின்ன விஷயத் திற்காக எரிந்து விழவில்லேயா ? ...ஆனல், அப்படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/25&oldid=616036" இலிருந்து மீள்விக்கப்பட்டது