பக்கம்:மாவிளக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மா விளக்கு

அண்ணே, எப்படியாவது உன்னைக் கடலிலே தேடிக் கண்டுபிடித்து என்னலான உதவி செய்ய வேணும்னுதான் வந்தேன் என்ருன் கங்கப்பன்.

‘ என்னத்துக்கு கான் உனக்கு என்னுத்துக்கு வேனும் நான் செத்துப்போல்ை உனக்கு நல்லது தானே ? காளியின் கோபம் அவனையும் அறியாமல் அப்படிப் பொத்துக்கொண்டு வெளிப்பட்டுவிட்டது.

கங்கப்பன் கொஞ்சகேரம் ஆலோசனைபண்ணினன். காளியின் வார்த்தைகள் அவனே உலுக்கின. கட்டு மரத்தைப் புயற்காற்று உலுக்கிற்று. ஆனால், காளியின் மனத்தை உலுக்கிய கோபப் புயலுக்கு இவையெல்லாம் இணை நிற்கமுடியாது.

கன்னியம்மன் கோயிலுக்குப் போய் வாக்குக் கேக்காமே முனியம்மா ஒண்ணுமே பண்ணமாட்டாள்னு உனக்குத் தெரியாதா, அண்ணே ? கன்னியம்மனக் கும்பிட்டுத்தான் ருக்குமணி அவளுக்குப் பிறந்தாளாம் : என்று கங்கப்பன் விஷயத்தை மெல்ல ஆரம்பித்தான்.

'அந்தப் பேச்சு இப்போ என்னத்துக்கு ? எதுக் கெடுத்தாலும் கன்னியம்மன் தலையிலே போட்டுட்டாத் தீர்ந்து போச்சு. அம்மன் பேரைச் சொல்லி ருக்கு மணியை உனக்குக் கண்ணுலம் பண்ணலாம்னு கினைச்சுக் கிட்டாளா அந்த முனியம்மா ? என்று காளி குமுறின்ை. -

அண்ணே, கன்னியம்மனிடத்திலே உனக்கு கம் பிக்கையில்லேயா ? நீயும் அந்த அம்மன் கோவிலுக்குப் போகாமெ இருக்கமாட்டியே ? கன்னியம்மாதானே நமக்கு தெய்வம் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/40&oldid=616067" இலிருந்து மீள்விக்கப்பட்டது