பக்கம்:மாவிளக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயல் 39

கன்னியம்மன் வாக்குக் கொடுத்தது மெய்யா ? இதெல்லாம் வெறும் புரட்டு. இவளுக்குத் தன் மகளை உனக்கே கொடுக்கவேணும்னு ஆசை. உனக்கும் நீயே கட்டிக்கவேணும்னு ஆசை. அதுக்குக் கன்னியம்மன் மேலே பழியைப் போட்டாச்சு-அவ்வளவுதானே ?

கன்னியம்மா வாக்குக் கொடுத்ததை முனியம்மா சொன்னவுடனே அதை அப்படியே நான் நம்பவில்லை. கண்ணுலத்துக்கு ஒத்துக்கவும் இல்லே. எதுக்கும் நானும் அவங்ககூட ஒருதடவை கோட்டை மைதானத் துக் கன்னியம்மன் கோயிலுக்குப் போய் பூ வெச்சுக் கேட்டு முடிவு பண்ணலாம்னு போனேன். இரண் டாவது தடவையும் பூ வெச்சுக் கேட்டோம்.'

ம்...... அப்ப என்னச்சு ?

செவப்புப் பூ வந்தர் ருக்குமணியை நீ கட்டிக்க வேணும். வெள்ளைப் பூ வந்தா கான் கட்டிக்க வேணும். அப்படின்னு கேட்டோம். வெள்ளேப் பூத் தாண்ணு அப்பவும் வந்தது.

பின்னேக் கட்டிகிட்டு சொகமா இருக்கிறது தானே ? இங்கே சாகறதுக்கு எதுக்கு இந்தப் புயலிலே வந்தாய் ?

இல்லண்ணே, எனக்கு இரண்டாக் தடவை வாக்கு வந்ததுகூட சமாதானமில்லே. நீயும் கன்னியம்மன் கோவிலுக்கு வரவேணும். எல்லாருமா சேர்ந்து போய் இன்னொரு தடவை பூ வெச்சுக் கேட்டுப் பார்த்திடுவோம். அம்மன் அப்போ வாக்குக் கொடுக்கிறபடி சந்தோச மாகப் பண்ணிக்குவோம். நீ யில்லாமெ கண்ணுலம் பண்ணிக்க எனக்கு மனசு கேட்கவே இல்லே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/41&oldid=616069" இலிருந்து மீள்விக்கப்பட்டது