பக்கம்:மாவிளக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயல் 41

எதுக்குப் பிரியவேணும் இந்த ஒரு வாரமாகப் பிரிஞ்சதே போதும் என்று அமைதியாகக் கங்கப்பன் பேசினன். மாருத அன்பேதான் பேசுகிறது.

இப்போ தப்பிப் பிழைச்சுக் குப்பத்துக்குப் போைேம்னு வச்சுக்கோ , அங்கே போய் மறுபடியும் கன்னியம்மனே வாக்குக் கேக்கருேம்னு வச்சுக்கோ : வாக்கு எனக்குச் சாதகமா வந்துட்டா ? என்று காளி திடீரென்று கேட்டான். r

எனக்கு முழுச் சம்மதந்தான். கொஞ்சங்கூட வருத்தமில்லே, ரண்டு பேருக்கும் ருக்குமணியைக் கட்டிக்க ஆசைதான். இருந்தாலும் கன்னியம்மன் வாக்குப்படிதான் முனியம்மா பண்ணுவாள். உனக்கு வாக்குக் கிடைச்சால் நீ பண்ணிக்கோ. எனக்குக் கிடைச் சாலும் நீ சந்தோசமா முன்னலேங்ண்னு கண்ணுலத்தைப் பண்ணி வைக்கனும் காம் எப்பவும்போல அண்ணன் தம்பியா இருக்கனும், உன்னே விரோதம் பண்ணிக்கினு எனக்குக் கண்ணுலமே வேண்டாம்.'

கங்கப்பன் பேச்சை முடிப்பதற்கு முன்னே காளி தீர்மானத்திற்கு வந்துவிட்டான். மூன்ரும் முறை வாக்குக் கேட்க வேண்டியதில்லை என்று இப்பொழுது அவனுக்கு நிச்சயமாகிவிட்டது. கங்கப்பன் சூழ்ச்சி யொன்றும் செய்யவில்லை என்று பூரணமாக அவனுக்கு விளங்கிப் போயிற்று. அவன் மனப்புயல் திடீரென்று ஓய்ந்துவிட்டது.

தம்பி, உன்னேக் காப்பாத்திக் குப்பத்துக்குக் கொண்டு போறதுதான் எனக்கு இப்போ கவலை. எங்கே துடுப்பை இப்படிக் கொடு. இந்தப் புயலே ஒரு கை பார்க்கிறேன் என்ருன் காளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/43&oldid=616073" இலிருந்து மீள்விக்கப்பட்டது