பக்கம்:மாவிளக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மா விளக்கு

அதே சமயத்தில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ராணு ' என்னும் யுத்தக் கப்பல் அலேகளைப் பிளந்து கொண்டுவந்து திடீரென்று அருகிலே காட்சியளித்தது. கட்டுமரத்தில் கெட்டியாகக் கட்டப்பட்டிருந்த ஒலேப் பாய்ப் பறியை வெடுக்கென்று பிடுங்கி காளி அதைத் தலைக்குமேலே ஆவலோடு வீசிiசிச் சமிக்கை செய்தான். பறிக்குள்ளிருந்த மற்ருெரு ரொட்டி குமுறும் அலேக ளிடையே விழுந்தது. அவர்களைக் கண்டு கொண்ட தாகக் கப்பலிலிருந்து பதில் சமிக்கை வந்தது.

யுத்தக் கப்பல் இப்போது எப்படி இங்கே வந்தது?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டான் கங்கப்பன்.

'கம்ம ராசாங்கத்திலேதான் அனுப்பியிருப்பார்கள். கம்ம முதல் மந்திரிக்கு ஏழை எளியவங்கன்ன இரக்க முண்டு என்று நிச்சயத்தோடு பேசின்ை காளி.

அவர்கள் சொகமா இருக்க வேணும் என்று கங்கப்பன் மனதார வாழ்த்தின்ை.

அவுங்க அனுப்பிலுைம் என் மனசிலே இருந்த அழுக்கு நீங்காதிருந்தா அந்தக் கப்பல் இந்தப் பக்கத் துக்கு வந்திருக்காது. நம்ம கடல் தெய்வம் கன்னியம்மன் அனுப்பமாட்டாள். அவள்தான் அந்த அரிவாளேயும் உன் கண்ணுக்குப்படாமல் மறைத்திருப்பாள். இல்லா விட்டால் நீ என் பக்கத்திலே வந்து இப்படிப் பேசி என் அழுக்கை நீக்க முடியுமா ? என்று காளி சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் சொல்லுவது கங்கப்பனுக்கு விளங்கவில்லை. ஏதோ பசி மயக்கத்திலே அண்ணன் பேசுகிருனென்று எண்ணிக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/44&oldid=616075" இலிருந்து மீள்விக்கப்பட்டது