பக்கம்:மாவிளக்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மாவிளக்கு

களிலெல்லாம் உன்னைப்பற்றி வீண் அவதுாருன செய்தி வரக்கூடாது.'

செவ்வாய்க் கிரகத்தில் சாதாரணமாக அவர்கள் பேசுவதில்லையென்ருலும் எனக்குப் புரியும்படி விஷ யத்தை எனக்குச் சொல்லுவதற்காக ஒருத்தியைப் பேசும்படி ஏற்பாடு செய்தார்கள். அவள் ஒரு மணி நேரத்திலே போதுமான ஆங்கிலம் தெரிந்துகொண்டு என்னேடு பேசத் தொடங்கிவிட்டாள். அத்தனே மூளைத் திறமை அவர்களுக்கு இருக்கிற்து. ஒரு பொருளே அவள் தொட்டுக் காண்பிப்பாள். நான் அதற்கு ஆங்கிலத்தில் பெயர் சொல்லுவேன். ஒடிக்காண்பிப்பாள் ; கடந்து காண்பிப்பாள். அப்படிச் செய்வதற்கு நமது பாஷையில் நாம் என்ன கூறுகிருேம் என்பதைச் சொல்லுவேன். உடனே அவள் தெரிந்து கொள்ளுவாள். இப்படித் தெரிந்து கொண்டு பிறகு பேசவும் செய்தாள்.

  • சரி சரி, கிளிப்பிள்ளை மாதிரி பேசினுளாக்கும் ? ஆனால், அந்தப் பேசாமடைந்தைகள் தங்கள் சபையிலே எப்படித் தீர்மானம் பண்ணினர்கள் ? நமது சபை களிலே பேச்சொன்றுதானே நம்முடைய வல்லமை ?

அவர்கள் எல்லோரும் சபைக்கு வந்தார்கள். வரும்போது இனிமையாகப் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தார்கள். ஆண்களும் பெண்களும் வந்து உட்கார்ந்து பத்து கிமிஷமிருக்கும். யாரும் பேசவே இல்லை. ஒருவரை ஒருவர் சில சமயங்க்ளில் பார்த்துக் கொண்டார்கள். என்னேயும் அடிக்கடி கவனித்தார்கள். பிறகு எழுந்து போய்விட்டார்கள். அவர்கள் தீர்மானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/56&oldid=616099" இலிருந்து மீள்விக்கப்பட்டது