பக்கம்:மாவிளக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6 மா விளக்கு

அதில் தோன்றவே தோன்ருது. உலகம் இன்பலோக மாகிவிடும்” என்று பம்கின்ஸ் வானவெளியை வெறித் துப் பார்த்துக்கொண்டு கூறின்ை.

" அவர்கள் ஒருவரை யொருவர் தெரிந்து கொள்ளும் வகை யெல்லாம் உனக்கெப்படித் தெரிந்தது ?” என்று நான் சந்தேகத்தோடு கேட்டேன்.

' அதைப்பற்றியெல்லாம் அந்த மங்கைதான் எனக்குத் தெளிவு படுத்தினுள் என்ன என் ராக்கெட் டிலேயே வைத்துத் திருப்பி அனுப்ப முடிவு செய்து விட்டார்கள். அதில் என்னவோ, சில மாறுதல்கள் செய்துவிட்டு அந்த மங்கை, இந்த ராக்கெட் பூமியி லுள்ள வாயுமண்டலத்தில் நுழைந்ததும் வெடித்துப் போகும். ஆனால், உனக்குத் தீங்கு நேராது. நீ கொண்டுவந்துள்ள பாரஷஅட்டின் மூலமாகவே ே உனது காட்டில் இறங்க ஏற்பாடு செய்திருக்கிறேன் ! என்று அவள் சொன்னுள்.”

"நான் திரும்பும்போதாவது அவளுடைய கையைப் பிடித்துக் குலுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நம் நாட்டு வழக்கத்தையும் தெரிவித்தேன். ஆகா! பூப் போன்ற கைகள் என்று சொல்லுகிருேமே இங்கே சொல்லுவதெல்லாம் வெறும் பேச்சு. அவள் கைகள் தான் உண்மையில் பூப்போன்றவை. ஆனால், அவற் றைத் தீண்டும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. என் உள்ளத்தை அவள் அப்படியே கண்டுகொண்ட தால் கைகுலுக்க மறுத்துவிட்டாள். உன்னுடைய உணர்ச்சிகளோடு என்னேத் தொட்டால் உன் கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/58&oldid=616103" இலிருந்து மீள்விக்கப்பட்டது