பக்கம்:மாவிளக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் விஷயம் 71.

நாங்கள் மூவரும் சென்னையில் ஒரே கல்லூரியிலே ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிருேம். அதனல் அடிக்கடி சக்திப்பதற்கு எங்களுக்குப் போதிய வசதி யிருக்கிறது. முத்துசாமி என்னைக் கேலி செய்தாலும் எனக்கு உதவி செய்யவேண்டும். என்ற ஆவலில் சிறிதும் குறைந்தவனல்ல. எப்படியாவது நானும் சுந்தரியும் தனியாகச் சந்திப்பதற்கு அவன் வழி தேடிக் கொண்டேயிருப்பான். அவனுக்குத்தான் கற்பனைத் திறன் மிகுந்திருக்கிறதே. அதை நன்கு பயன்படுத்தி ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து அவளேயழைக்கச் செல்லுவான். முத்துசாமியிடம் பேசச் சமயம் வாய்த் ததே என்று அவளும் குதுாகலமாக வருவாள். பிறகு அவளே என்னிடம் இருக்க வைத்து விட்டு ஏதோ அவசர காரியத்தைத் திடீரென்று கினைத்துக்கொண்ட வன் போலப் பாவனை செய்து கழுவிவிடுவான்.

நேற்று முந்தின நாள் காங்கள் மூவரும் கல்லூரி முடிந்ததும் கடற்கரைக்குச் சென்று மெரீன சிற்றுண்டி விடுதியில் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்தோம். சிலுசிலு வென்று குளிர்காற்று வீசிற்று. அந்தக் குளிரிலே சூடாகக் காப்பி குடிப்பதிலுள்ள இன்பத் தைப் பற்றி முத்துசாமி உற்சாகமாக வருணிக்க ஆரம் பித்து விட்டான். ' காற்றிலே மிதந்துவரும் காப்பியின் மணத்திற்கு இணை சொல்லவே முடியாது. காதலியின் கூந்தலிலே ஒருவித இயற்கை மணம் இருப்பதாகக் கவிஞர்கள் கூறியிருக்கிருர்கள். காப்பியின் மணத்திற்கு முன்னல் அதெல்லாம் போட்டி போட்டு கிற்க முடியாது” என்ருன் முத்துசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/73&oldid=616134" இலிருந்து மீள்விக்கப்பட்டது