பக்கம்:மாவிளக்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மா விளக்கு

" ஏன் முடியாது ? நீ சொல்லுவது சரியல்ல. காதலியின் கூந்தலில் உள்ள நறுமணத்தை அறிந்து இன்புறுவதற்கு உன்னேப் போன்ற நக்கீரர்களால் முடியாது’ என்று நான் சற்று கொதிப்போடு பேசி னேன். சுந்தரியின் முன்னல் காதலின் பெருமையை என்னல் விட்டுக்கொடுக்க முடியுமா ?

நக்கீரளுேடு அவனே ஒப்பிட்டுக் கூறியதல்ை முத்துசாமி ஒரு வகையிலும் மடங்கிவிடவில்லை. “போடா போ, காதலியின் கூந்தலுக்கு வாசனை இருக் தாலும் அந்த வாசனையை நுகராமல் எத்தனே நாள் வேண்டுமானலும் இருக்கலாம்; ஆனால், காப்பியின் மணமும் சுவையும் ஒரு வேளைக்கு இல்லாவிட்டால் முடியுமா ?” என்று கூறிக்கொண்டு அவன் சுந்தரியைப் பார்த்துச் சிரித்தான். -

அவன் பேச்சிலே அவள் சொக்கிப் போய்விட்டாள் என்பதை நான் உணர்ந்தேன். நீங்கள் கூறுவது மெய் தான் ; என்னல் காப்பி யில்லாமல் ஒருவேளைகூட வாழ முடியாது’ என்று அவள் அவன் கட்சியை ஆதரித்துப் பேசினுள்.

அதிலிருந்து காதலேப் பற்றியும், காதல் கட்டங் களே நம் நாட்டுச் சினிமாப் படங்கள் காண்பிக்கும் அற்புதத்தைப் பற்றியும் பேச்சு வளர்ந்தது. கடற் கரைக்குச் சென்று அமர்ந்தப் பிறகும் இந்தப் பேச்சு முடியவில்லை.

சற்று நேரத்தில் முத்துசாமி வழக்கம்போல அன்றும் எங்களைத் தனியே விட்டுப் பிரிந்துவிட்டான். நான் சுந்தரியிடம் என் காதலேப் பற்றி உருக்கமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/74&oldid=616136" இலிருந்து மீள்விக்கப்பட்டது