பக்கம்:மாவிளக்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மணி 85

பயந்து பயந்து, அந்தபயமே ரத்தத்தில் ஊறி இயற்கைச் சுபாவமாக மாறிவிட்டமையால் துணிச்சலாக அவரால் எந்தக் காரியத்தையும் சட்டென்று செய்ய முடியாது. பல நாள் யோசனை செய்து, சிதறுண்டு கிடக்கும் தைரியத்தையெல்லாம் திரட்டி, அத்துடன் வாத்தியார் வேலே மேலுள்ள வெறுப்பையும் அதனுல் படும் குடும்பக் கஷ்டங்களையும் கூட்டிக் கடைசியில் சூதாட்டம் ஆடிப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிருர் வந்த பிறகுங்கூட எத்தனே தயக்கம், எத்தனை மனக் குழப்பம் !

ஆனால், மறுநாள் மத்தியான்னம் இரண்டு மணிக்கு ஒரே தைரியத்துடன் கண்காட்சிச் சூதாட்டத்திற்குப் புறப்பட்டு விட்டார். அந்த நாளே விட்டு விட்டால் அடுத்த சனிக்கிழமை வருவதற்குள் பணமெல்லாம் தீர்ந்து போகுமே !

வந்தவர் நேராகச் சூதாடுமிடத்திற்கே காலெடுத்து வைத்தார். ஒரு ஐநூறு ரூபாய் அடித்துவிட்டால் அப்புறம் சாவகாசமாகக் கண்காட்சியைப் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அதற்கு என்ன அவசரம் ?

சூதாட்டத்திலே எது தமக்குப் பிடிக்கிறது : எதில் கல்ல பணம் கிடைக்கும் என்று ஆராய்ந்து பார்த்தார். ஓரிடத்திலே மேஜையின் மேல் ஒரு மெழுகுரட்டு விரித் திருந்தது. அதில் யானே, குதிரை, ஒட்டகம் என்றிப்படி ஆறு மிருகங்களின் உருவங்கள் தனித்தனியாக ஆறு கட்டங்களில் வரையப்பட்டிருந்தன. பக்கத்திலே ஒரு பெட்டியில் பல காகித உறைகள் அடுக்காக இருந்தன. ஒருவன் அந்த அடுக்கிலிருந்து ஒரு உறையை எடுத்து

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/87&oldid=616163" இலிருந்து மீள்விக்கப்பட்டது