பக்கம்:மாவிளக்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 மா விளக்கு

மளித்தன. பச்சை நிறத்திலே நல்ல தடிப்பான சட்டம் போட்ட மூக்குக் கண்ணுடி ஒன்றும் அவன் அணிந்தி ருந்தான். அது அந்தத் தோற்றத்தை மேலும் மிகைப் படுத்திக் காட்டிற்று. ஆல்ை, பெயர் மட்டும் சுந்தர வதனன் ! “ அதனலென்ன ? நான்தான அப்படிப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன் ? நம் நாட்டிலே எத்தனையோ பேருக்கு இப்படி கேர்மாருகப் பெயர் அமைந்திருக்கிறது. நேற்றுக் கடற் கரையிலே பார்த்தேனே அந்தப் பெண்ணுக்கு மீட்ைசி என்று பெயராம். மீனப் போல்வா கண்ணிருந்தது ; புளியங் கொட்டை மாதிரிதானே காட்சியளித்தது ?’ என்று இவ்வாறு அவன் சிந்தனை ஒடிற்று. புளியங் கொட்டையைக் கண்ணுக்கு உபமானமாக நினைத்ததால் அவனுக்குத் தன் கற்பனைத் திறமையைப்பற்றி ஒரு தனிப்பெருமையும் கம்பிக்கையும் எழுந்தன. படுக்கை யைத் துக்கி வந்ததற்காகப் போர்ட்டர் கூலி கேட்ட போதுதான். தற்பெருமை செய்து கொண்டிருந்த அவனுடைய சிந்தனை தடைபட்டது.

போர்ட்டருக்கு நான்களுவைக் .ெ கா டு த் து அனுப்பிய பின் சுந்தரவதனன் ரயிலேவிட்டுக் கீழிறங்கி பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் நடமாடத் தொடங் கின்ை. அங்கு கண்ட காட்சிகள் அவன் சிந்தனேக்குப் புதிய விருந்தாக இருந்தன. ' காரியாலயத்திற்குள்ளே அடைபட்டுக் கிடப்பதால் எத்தனை அனுபவங்கள் எனக்குக் கிடைக்காமல் போகின்றன ! இன்ருவது வெளியே உல்லாசமாகப் போய்வரப் புறப்பட்டேனே ரொம்ப நல்ல காரியம்” என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/94&oldid=616177" இலிருந்து மீள்விக்கப்பட்டது