பக்கம்:மாவிளக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்டு 9.3

அவன் கண்கள் துருதுருவென்று வருவார் போவாரை யெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தன.

ரயிலுக்கு வருகிற மக்களே இரண்டு ஜாதியாகப் பிரிக்கலாமென்று திடீரென்று அவனுக்குத்தோன்றியது. ஒளவையாரே இப்படி ஜாதி பிரிக்கும் காரியத்தில் இறங்கியிருப்பதால் தானும் அதைச் செய்யவேணும் என்று அவன் கருதினன். அவசரம் அவசரமாக விழுந்தடித்து ஓடிவந்து ஏதாவது ஒரு பெட்டிக்குள் நுழைந்து அங்கு ஒரே கூட்டமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அங்கேயே அடைபட்டுக் கிடக்கிற மக்கள் ஒரு ஜாதி , ஒவ்வொரு பெட்டியாகப் பரிசோதனை செய்துவிட்டு சாவகாசமாக ஒரு பெட்டியில் வசதி பார்த்து ஏறுகிறவர்கள் இன்ைெரு ஜாதி. இங்கேயும், " ஜாதி யிரண்டொழிய வேறில்லே ' என்று சுந்தரவதனன் மனதிற்குள்ளேயே தீர்ப்புக் கூறிக் கொண்டான்.

ரயில் புறப்படுவதற்கு அறிகுறியாக முதல் மணி அடித்தது. சுந்தரவதனன் தான் ஏறவேண்டிய பெட்டியை நோக்கி கடந்தான். அந்தப் பெட்டிக்குள்ளே இப்பொழுது தாடியும், துருக்கிக் குல்லாவுமாக ஒரு தடி மனிதர் அமர்ந்திருப்பதைக் கண்டான். வண்டியில் எறும் பாவனையிலேயே அவன், ரிசர்வேஷன் கார்டை மற்ருெரு முறை பார்த்தான். சையத் காதர் என்ற பெயர் அவன் பெயருக்கும் கீழே தென்பட்டது. ' கூடப் பிரயாணம் செய்பவரின் பெயரை எவ்வளவு நாகரிக மாகத் தெரிந்து கொண்டேன் 1’ என்று அவனே பெருமைபட்டுக்கொண்டு விரிக்கப்பட்டிருந்த தனது படுக்கையிலே அமர்ந்தான். எதிர்ப்பக்கத்து மெத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/95&oldid=616179" இலிருந்து மீள்விக்கப்பட்டது