பக்கம்:மாவிளக்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மா விளக்கு

புலயிைற்று. இருந்தாலும் அதை வார்த்தையாலும்

ஒப்புக்கொள்ளாமல், ' இல்லே, சாகெப், அப்படியெல் லாம் நான் பயப்படுகிற ஆசாமியல்ல ” என்று

மிடுக்காகச் சொன்னன்.

சாகெப்புக்கு அந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. ' உண்மையிலேயே இவன் பயப்படாத ஆசாமியா அல்லது அப்படிப் பாவனை செய்கிருன ? அல்லது இவனே ஒரு திருடனக இருந்தால்-இப்படிக் கூடவே வந்து இனிமையாகப் பேசித் திருடுகிறதைப் பற்றி எத்தனையோ தடவை படித்திருக்கிறேனே ? இந்தப் பெட்டியிலே என்னையும் அவனையும் தவிர வேறு யாருமே இல்லையே தூங்கிய பிறகு இவன் தனது கைவரிசையைக் காட்டிவிட்டால் ? எதற்கும் இப் பொழுதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ” என்று இப்படித் தீவிரமாக எண்ணமிட்டார். அதனுல்தான் அவர் அப்படிப் பயங்கரமாகப் பேசவும் நடக்கவும் தொடங்கினர்.

' என்ன, உமக்குப் பயமில்லேயா ? ரயில் திருட்டைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டால் பயமே அறியாதவன் கூடப் பயப்பட்டுப் போகவேணுமே? அமானுல்லாகான் தெரியுமா உமக்கு’ என்று அவர் கூர்ந்த பார்வையோடு கேட்டார்.

'யார், ஆப்கானிஸ்தானத்துக்கு முன்னே ராஜாவாக இருந்தவரா?”

" ஆமாம். அவரேதான். சமீபத்திலே அவர் ஐரோப் பாவில் ரயிலிலே போகிறபோது இரண்டாயிரத்து இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/98&oldid=616185" இலிருந்து மீள்விக்கப்பட்டது