பக்கம்:மின்னல் பூ.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவள்


மின்னற் கொடியும் அவளே
வீணையின் நாதம் அவளே
கன்னிப் பெருமையும் அவளே
கனவின் நிழலும் அவளே

வானின் நீலம் இவளே
வாரிதி ஆழம் அவளே
தேனின் மதுரம் அவளே
சிறு நகைப் பித்தும் அவளே

நெஞ்சக் கனலும் அவளே
நினைவின் பொருளும் அவளே
தஞ்சத் தெய்வம் அவளே
சங்கம வாயில் அவளே!

33

மி.- 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/35&oldid=1116711" இலிருந்து மீள்விக்கப்பட்டது