பக்கம்:மின்னொளி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 மின்னொளி


இருளன்:- வாப்பா வயிரமுத்து! வா !செளக்யந்தான்.

வயிர : (உற்றுப்பார்த்து) யாரிது? இவருதான் புதுவாத்தியார் செல்லத்துரையா?

இருளன்:-ஆமாம்பா நீ எப்ப வந்தே?

வயிர : இப்பத்தான் வர்றேன்.

இருளன் :- எங்கேருந்து ?

வயிர:- எங்கே, என்ன, எப்போங்கிறதுதான் இவுரு அகராதியிலேயே கெடையாதே புதுசா கேக்கிறியே பூசாரி

இருளன் - ஆமா, இப்படி தெல்லவாரியாவே திரிஞ்சா, ஒ ங் க ம மா மா, ஒனக்கு எப்படியப்பா பொண்ணு குடுப்பாரு?

வயிர:-பொண்ணா !ஃகும்.......!அவுரு குடுக்காட்டி அவரைப் பிடிச்ச பிசாசு குடுக்குது

இருளன் :- (செல்லத்துரையிடம்) வாத்தியாரே இவுரு யாரு தெரியுமா ?இவுரு நம்ம மணியக்காரர் பொன்னப்பரோட தங்கச்சி மவன்

செல்ல:-(வியந்து)அப்படியா !மகிழ்ச்சி வந்து நான்கைந்து வாரமாயிற்று இதுவரை நான் பார்க்கவில்லையே இவரை.


இருளன் :- (கண்ணடித்து )இ வு ரு ஒரு மாதிரிங்க ஊரிலே சரியா தங்கமாட்டாரு. சீட்டாட்டத்தில பெரியகையி. இவருக்கு ராவு பகலுன்னு வித்தியாசமே கெடையாது.

வயிர :- (கடுப்பாக) பூசாரி என்ன? மண்டை ரொம்ப கனத்துப்போச்சா? நாக்கை உள்ளே வச்சுப் பேசு. என்னைத் தெரியுமில்லே! ஆமா.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/12&oldid=1412421" இலிருந்து மீள்விக்கப்பட்டது