பக்கம்:மின்னொளி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

இருளன் :- (கடுமையாக)வாத்தியாரே!

செல்ல :- ஐயா!

இருள்ன் :- எம் பொழைப்பைக் கெடுத்திட்டியே!

செல்ல :- அந்த எண்ணம் அணுவளவும் எனக்கில்லையே ஐயா!

இருளன் :- (கோபத்தோடு) அடேய் ஒம்படிச்ச புத் தியை-பகுத்தறிவை-எங்கிட்டே வச்சுக்காதே! வந்த புதுசிலையே பிளேக்கு, அம்மையெல்லாம் தொத்து நோயின் னு பிரசங்கம் பண்ணுனே! அப்பவே எனக்கு சுருக்குன்னுதாம் பட்டுது.

செல்ல :- அது ஆராய்ந்து கண்ட முடிவு. மெய்யான செய்தியாயிற்றே!

இருளன் :- எந்தக் குருடன்டா சொன்னவன்? பாவி ஓங்காளியும் மகமாயும் தொத்து நோயா? அதைக் கொண்டாட்றதா தப்பு? ஒம் பல்லைப் புடுங்கினாலும் பாவமில்லியே படுபாவி

செல்ல :- ஐயா மரியாதைக் குறைவாகப் பேசவேண்டாம்.

இருளன் :- பிச்சைக்காரப் பயலே ஒனக்காடா மரி யாதை வேணும்? என் ஊட்லே இருந்துகிட்டே எம்பொழைப்பைக் கெடுத்த துரோகி இப்பவே தாண்டு வெளியே. இனிமே ஒரு விநாடிகூட இங்கே இருக்கப்படாது!

செல்ல :- நல்லது. அப்படியே செய்கிறேன்.

(தன் சாமான்களை யெல்லாம் எடுத்து வைக்கிறான் செல்லத்துரை.)

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/22&oldid=1412857" இலிருந்து மீள்விக்கப்பட்டது