பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 5 : காலத்தில் அவன் இசுரவேலர்களின் சீர்த்தி, ஈடிணையற்ற ஏந்தல்! இப்போது அவன் இசுரவேலர்களின் துன்பக்கேணி! (சிம்சோனை நோக்கி) நாங்கள் உன் நண்பர்கள். உன்னைச் சார்ந்தோர்கள். உனக்குத் தெரியாதவர்கள் அல்லர். எசுதோல் மற்றும் சோரா பள்ளத்தாக்கிலிருந்தும் உன்னைக் காண வந்திருக்கிருேம். உன் இரக்கநிலை கண்டு கண்ணிர் சிந்த வந்துள்ளோம். நலமளிக்கும் மருந்துபோல் மெல்லிய இனிய மொழிகளால் நல்லுரை தந்து ஆறுதல்படுத்த வந்துள்ளோம். தக்க அறிவுரை அல்லலைக் குறைக்கும். புரையோடிய புண்ணுக்கு மருந்துபோல் புண்பட்ட உள்ளத் திற்குப் பொருத்தமான உரைகள் இதமானவை. சிம்சோன்: நண்பர்களே, உங்கள் வருகை எனக்குத் தெம்பூட்டுகிறது. நாணயமில்லா நண்பர்களை நினைவூட்டு கிறது. அவர்கள் போலி நாணயங்கள். உண்மை நாணயம் போல் தோன்றிடினும் தரம் தாழ்ந்த மாழையால் ஆனவை. மதிப்பிழந்தவை இந்த மொழிகள். உங்களைப் பற்றியல்ல நான் பேசுவது, நட்பைப் பிழைப்பாய் கொண்டவர்கள் பற்றியே. வாழ்வில் அப் போலி நண்பர்கள் தேனிக்கள் போல் என்னை மொய்த்தார்கள். என் தாழ்வில் அவர்கள் சென்ற சுவடு தெரியாது சென்று மறைந்தார்கள். நண்பர்களே, தற்போது என்னைச் சூழ்ந்திருககும் துன்பங்களை நீங்கள் காண் கின்றீர். அவற்றுள் பார்வையின்மையே மேலோங்கியுள்ளது. பார்வையின்மையில்ை, தலை நிமிர்ந்து உங்களைப் பார்க்க இயலாதவளுய் இருக்கிறேன். எல்லா ஏந்துகளோடும் கட்டப்பட்ட கப்பலைப்போல், என் உடல் இறைவனின் வல்லமையால் கட்டப்பட்டிருக்கிறது. ஆனல் மதியிலா மீகாமன்போல் என் உடல் வலிமையை நானே சிதைத்து விட்டேன். வல்லோனிடமிருந்து வரமாகப் பெற்ற வலிமை யின் கமுக்கத்தை நாணயமில்லா நங்கையிடம் அவளின் பொய் முயக்கில் மயங்கி வெளியிட்டேன். நண்பர்களே! சொல்லுங்கள். பாடல்களிலும், பழமொழிகளிலும் எனது பெயர் மடமைக்குச் சான்ருகப் பயன்படுத்தப்படுகிற தல்லவா? நான் தக்க தண்டனையைத்தான் அடைந்திருக்