பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மாமல்லன் சிம்சோன் திருக்க முடியாது. கடவுள் இல்லை என்ற கோட்பாடு எப் போதாவது இருந்திருக்குமானல், அக்கோட்பாடு பெரும் பாலோரை ஆட்கொண்டிருக்க முடியாது. அத்தகைய கோட் பாடு முட்டாள்களின் உள்ளத்தில் மட்டுமே உறைந்திருக் கின்றது. முட்டாள்களைத் தவிர கற்றறிந்தோர் இத்தகைய கோட்பாட்டைக் கொண்டிருக்க முடியாது. அப்படிப்பட்ட முட்டாள்கள் வழிகாட்டுவாருமின்றி, பின்பற்றுவாருமின்றி இருப்பார்கள். ஆனல் கடவுளின் வழிகள் முறைகேடானவை என்ற எண்ணம் கொண்டோர் பலருண்டு. கடவுளின் அறிவையும் முறையையும் ஐயங்கொள்பவர்கள், கடவுளின் புகழைத் தாம் மாசுபடுத்துகிருேம் என்பதை உணராதிருக் கிருர்கள். அத்தகையோர் தங்கள் ஐயங்களில் சிக்கி மேலும் மேலும் குழப்பம் அடைகிருர்கள். அவற்றினின்று விடுதல்ை பெறுவதில்லை. மத நம்பிக்கையில்லாத ஒருவன், தன்னுடைய கோட்பாட்டிற்குள், முதலும் முடிவும் இல்லாத எல்லையற்ற மெய்ப்பொருளைக் கட்டுப்படுத்த முனையும்போது தவறு செய்தவனகிருன். அவர் கட்டளைகளைக் கொடுத்தது நம்மை கட்டுப்படுத்தவே அல்லாது அவரை அல்ல. அவர் கட்டளே களைக் கைக்கொள்வதிலிருந்து எவருக்கும் விதி விலக்கு அளிப்பதும், கற்பனைகளே மீறியவர்களுக்குத் தண்டனையி விருந்து விதிவிலக்கு அளிப்பதும் அவருடைய அதிகாரத் திற்குட்பட்டது. ஏனெனில் அவர் வல்லவர். கீழ்ப் படியாமையை ஒழுங்குறச் செய்பவர் அவரே. கடவுள் ஊழியத்திற்கென்று வாக்களித்தவனும் திருமணத்தைத் தவிர்க்க வேண்டியவனுமாகிய நசரேயன் துய்மையும், கற்பு மில்லா வஞ்சகப் பெலித்தியப் பெண்ணை மணமுடிக்கக் காரணமானவரும் கடவுளே. கடவுளின் வழிகள் வினவிற்குரியன அல்ல. அவை காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை. அவரின் வழிகளை ஆய்வது வீண். சான்ருக, சிம்சோனின் திருமணத்தை ஆய்ந்தால் சிம்சோன் ஒழுக்கத்திற்கெதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. இயற்கையின் விதிப்படி அவள் தூய்மை யற்றவள் அல்லள். திருமணத்திற்குப் பின்னரே அவள்