பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மாமல்லன் சிம்சோன் எதிர் நிற்பார்? எவராலும் இயலாதே. பீடுடனும், மெரு மிதத்துடனும் எதிர்நிற்கும் பகைவர்களைத் தன்னந்தனிய ய்ை எதிர்த்துப் போரிட்டான். அவனே ஒரு மாபெரும் படையென நின்றன். இன்ருே அவன் காசாவிலே கைதியா யிருக்கிருன். சட்டிமுனைத் தொலைவில் நின்றுகொண்டு தன் பக்கத்தில் நெருங்க அ ஞ் சும் கோழையிடமிருந்துசுட தன்னைத் தற்காத்துக்கொள்ளும் துப்பற்றிருக்கிருன். அந்தோ! நிலையிலா மானிட வலிமையில் கொண்ட நம்பிக்கை அழியக்கூடியது. மானிட இயல்பு ஒவ்வொன்றுமே மாயையானது, வீணானது. மாந்தனிடத்தில் நம்பற்குரியது ஏதுமிலலை. அவனது ஆண்மை, ஆற்றல் அனைத்தும் மாறக் கூடியவை. நாம் நாடித் தேடும் நல்லவையே நம் துன்பத்தின் ஊற்ருகவும், அழிவிற்குக் காரணமாகவும் ஆகிவிடுகின்றன. மலட்டினைச் சாவிப்பாய் எண்ணி, மழலைச் செல்வத்திற்காய் மன்ருடினேன். அப்பேற்றினைப் பெற்றேன். வலிமைக்காக வும், நல்லியல்பிற்காகவும் அனைவராலும் பாராட்டப்பட்ட மகனைப் பெற்றேன். அவன் வானேர்களின் வல்லமையைப் பெற்றிருந்தான். எனவே, ஒவ்வொருவரும் என்ன நற் பேருளன் என்றனர். ஆனல் நான் ஏன் தந்தையானேன்? கடவுள் ஏன் என் வேண்டுகோளை நிறைவேற்றினர்? முடிவில் என்னை அல்லல்படுத்தவா? கடவுளின் வுரங்களெலலாம் அவற்றை அடையவேண்டுமென நம் ஆர்வங்களைத் தூண்டு வதேனே? இறுதியில் சாவிப்பாய் மாறுகின்ற சலுகைகளை வல்லவன் நமக்கு நல்குவதேனே? தேளென அவை நம்மைக் கொட்டு கின்றனவே. நீ செயலாற்று என முன்னறிவிக்க இருமுறை இறைவன் தம் தூதர்களை அனுப்பினர். அம்முன்னறிவிப்பின் முடிவு இப்படியாயிற்றே. தெரிந்தெடுக்கப்பட்டுப் புனிதமாக்கப் பட்ட செடியினைப்போல் உனது வருகையும் வளர்ப்பும் இறை யாணேயின்படி புனிதமானது. ஆனல் உனது புகழ் குறுகிய கால வாழ்வுடையது, அற்புதமாகவும், கவர்ச்சியாகவும் சிறிது காலம் மட்டுமே வாழ்ந்து பின் தன் சிறப்பிழந்து மடி