பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 63 எனக்கென்று விதிக்கப்பட்ட போராட்டம் முடிந்துவிட்டது. இப்போதுள்ள போராட்டமெல்லாம், இறைவனுக்கும் வருண னுக்கும் இடையிலேதான். எனது வீழ்ச்சியின்மூலம் வருணன் இறைவனுக்கு இணையானவனகிவிட்டான். இணையானது மட்டுமின்றி இசுரவேலர்களின் இறைவனைவிட உயர்வாகத் தன் தெய்வீக நிலையை வருணன் ஒப்பிடுகிருன். உறுதியாய்ச் சொல்லுகிறேன். இந்தத் தாக்குதலை நம் உண்மை இறைவன் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை. அவர் இந்த அறைகூவலை ஏற்பதில் காலம் தாழ்த்தப்போவதில்லை. மீண்டும் அவர் எழுந்து, தம் மேலாண்மையை நிலைநிறுத்தப் போகிருர். வருணன் அவர் முன்னே மறுபடியும் தலை வணங்கப் போகிருன். என்னை வெற்றிகொண்டதால் அவ னுக்குக் கிடைத்த மரியாதையை ஒட்டுமொத்தமாய் இழக்கப்போகிருன். அவனின் அடியார்கள் குழப்பமும் அச்சமும் அடையப்போ கிரு.ர்கள். மனுேவா: இந்த முன்னறிவிப்பு எனக்கு மிகுந்த ஆறுதலே அளிக்கிறது. உனது இந்தச் சொற்களை நான் முன்னேட்ட மாய் எடுத்துக்கொள்கிறேன். தனது பெயருக்கும், பெருமைக் கும் ஏற்பட்ட இந்த ஆய்விலிருந்தும், போட்டியிலிருந்தும் தன் புகழை நிலைநிறுத்தக் கடவுள் தாமதிக்க மாட்டார். இருவரில் (வருணன்-இறைவன்) எவர் உயர்ந்தவர் என்ற ஐயத்தில மக்களை இசுரவேலர்களின் இறைவன் தவிக்க விடப்போவதில்லை. ஆனல் உனது விடுதலையைப் பெற நான் என்ன செய்யவேண்டும் என்பதை அறியாதிருக்கிறேன். நீ, பெலித்தியர்களின் கையில் அடிமையாயிருக்க உடன்படக் கூடாது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில உன்னே விட்டுவிட முடியாது. உனது விடுதலைக்கான ஏற்பாடுகளைப் பற்றித் தீர்வுசெய்யச் சில பெலித்திய ஆண்டான்களை அணுகுவதற்கு வழிமுறைகள் செய்துளளேன். நீ செய்கின்ற இந்த அடிமைத் தொழிலையும் உன் பாடுகளையும் தொலலை களையும் பார்த்து அவர்கள் உன்னைப் பழிவாங்கும் உணர்வில் இபபோது நிறைவடைந்திருப்பர். உனது பாடுகள் இறப்பை விடவும் இழிவானவை. அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்