பக்கம்:மிஸஸ். இராதா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உக்கிராண அறைக்கு அருகில் படுத்துக் கொண்டிருந்த ஆனந்தனின் தாயார் அப்போது ஓடிவந்து “இங்கே வாங்க வேகமா வாங்க! தம்பி என்னமோ சொல்றான்!” என்று பதட்டத்துடன் கத்தினாள்.

"தம்பி என்ன சொன்னான்? ஏன் இப்படிப் பதறிப் போயிப் பேசிறே?”

“இங்கே வாங்களேன்; எனக்கு அதைக்கேக்கவே பயமா இருக்கு!”

ஆனந்தனின் தந்தை எழுந்து விரைந்தார். அவர் மனைவி இடிந்துபோய் நின்றாள். அவளுக்கு அருகில் வியர்க்க வியர்க்க பேயறைந்தவனைப் போல் ஆனந்தன் குறிச்சியில் சாய்ந்து கிடந்தான்.

“என்னப்பா இதெல்லாம்! ஏன் உங்கம்மா இப்படிக்கதறிக் கிட்டிருக்கா?"

“எல்லாம் அவனைத்தானே கேளுங்க! குலம், கோத்திரம் பாக்காமெ சம்பந்தம் பண்ணினா இப்படித்தான் வந்துசேரும்”

"என்னடி விடுகதை போட்டுக்கிட்டிருக்கே! நடந்ததைச் சொன்னவுல்ல நானும் தெரிஞ்சுக்கலாம்!”

"மஞ்சுளாவுக்கு குஷ்டமாம்! என்புள்ளே புழுவாத் துடிக்கிறானே!” என்றாள் ஆனந்தனின் தாயார்.

"என்ன குஷ்டமா? என்னடா இது! உங்கம்மா சொல்ற தெல்லாம் மெய்தானா? ஏண்டா பேசாமெ நிக்கிறே?”

“அவனைக் கேட்டா எப்படி? அவன் இதுக்கு மேலே எப்படிச் சொல்லுவான்?”

"நீயாவது விவரமாச் சொல்லு! நீ போயிப் பாத்தியா? அவன் சொன்னாச் சரியாப் போச்சா? இன்னும் சாமி கூடச்

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/36&oldid=1549831" இலிருந்து மீள்விக்கப்பட்டது