பக்கம்:மிஸஸ். இராதா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர்க்கை சேரல்லே! அதுக்குள்ளே இந்தக் கூத்தா" பெரியவர் பொரிந்து தள்ளினார்.

‘'எதுக்கு இந்தச் சந்தேகம்! நானே போய்ப் பாத்துட்டு வந்துடுறேன்!” என்று கூறிவிட்டு ஆனந்தனின் தாயார் கடகடவென்று மாடிப்படி ஏறிப்போனாள். மனைவியைப் பிரசவ அறைக்குள்ளே அனுப்பிவிட்டு, வெளியில் வெடவெடத்துப் போய் நிற்கும் கணவனைப்போல பெரியவர் பரபரப்புடன் உலாத்திக் கொண்டிருந்தார்.

எதிரிகளுக்குப் பயப்படாத எப்பேர்ப்பட்ட பலசாலியாக இருந்தாலும் சொந்த வீட்டில் ஊனம் ஏற்பட்டு விட்டால் களங்கம் தோன்றி விட்டால் அவன் உள்ளம் உடைந்து அவன் கோழையாகி விடுகிறான்; அவன் உடல் கலகலத்து விடுகிறது ஆனந்தனின் தந்தைக்கும் அந்த நிலை தான்.

கல்யாணப் பந்தலில் கட்டியுள்ள மாவிலைகள்கூட இன்றும் காயவில்லை; கண்ணைக் கவரும் சிங்காரப்பந்தலும் அதில் தொங்கிய நொங்குக் குழைகளும் அவரைப் பார்த்து நையாண்டி செய்வது போல் தெரிந்தது. அவர் நெற்றியில் வைத்திருந்த குங்குமப் பொட்டு இளகி வடிந்தது. மழையில் நனைந்தவரைப் போல் அவர் அணிந்திருந்த சில்க் ஜிப்பா வியர்வையால் ஈரமாகி விட்டது. அதுவரை சோபாவில் சாய்ந்து கிடந்த ஆனந்தன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை பேதலித்தவனைப் போல, குற்றம் புரிந்து விட்டவனைப்போல் ஊமையாக இருந்தான். . கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மேலே போன ஆனந்தனின் தாயார் இறங்கிவிட்டாள். இறங்கி வரும்போதே அவள் பத்ரகாளியாகத்தான் வந்தாள்.

‘என் குடி கெட்டுப்போச்சே! ஒரே புள்ளை! அவன் தலையெழுத்து இப்படியா இருக்கணும்?’ என்று ஒப்பாரி வைத்துக் கொண்டே இறங்கினாள்.

“என்னடி நடந்து போச்சு? விவரமாச் சொல்லு!”

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/37&oldid=1549835" இலிருந்து மீள்விக்கப்பட்டது