பக்கம்:மிஸஸ். இராதா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தன் முதலில் பதில் ஏதும் சொல்லவில்லை; பதுமையைப்போல் உட்கார்ந்திருந்தான்.

ம ஞ் சு ளா வி. ற் கு ம் அவனுக்கும் ஏற்பட்ட தொடர்பு; அதற்குப் பயன்பட்ட பச்சைக்குழந்தை; இருவரும் பூங்காவிலே உலாவியது; திரைப்படத்திற்குச் சென்று இணைந்து உட்கார்ந்திருந்தது — எல்லாமே ஆனந்தனின் மனத்திரையில் வண்ண ஒவியங்களாகத் தோன்றித் தோன்றி அழிந்தன.

“எத்தனை புரட்சிகள் முளைச்சாலும் ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்யறது எவ்வளவு ஆபத்துன்னு தெரிஞ்சு போச்சா? அதனாலேதான் அந்தக் காலத்திலே அத்தை மகள் மாமன் மகள் இப்படிப் பாத்துக் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிவச்சாங்க! ஒண்ணுக்குள்ளே ஒண்னு சம்பந்தம் பண்ணினாத்தான் உள்விவகாரமே வராது! இப்படி ஏமாறவேண்டிய அவசியமே வந்திருக்காது” சுற்றியிருந்தவர்களின் இந்தக் கரைச்சல் ஆனந்தனைப் பைத்தியம் பிடித்தவனைப் போல் ஆக்கிவைத்தது.

ஆ ன ந் த ன் அப்போதும் பேசவில்லை. அரண்டு கிடந்த அவன் உள்ளம் அதுவரை தெளியவில்லை.

"நான் ஏழைப் பெண்; நம்முடைய உறவை உங்கள் வீட்டார் அங்கீகரிக்கவே மாட்டார்கள். ஆகவே நமது உறவு ஒரு கனவாக முடிந்து போகட்டும். ஒரு ஆண் எவ்வளவு கெட்டாலும் சமூகத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து விடலாம். பெண்கள் அப்படியல்ல; அவர்கள் கெட்டுவிட்டால் ஒருமுறை கடலில் கலந்துவிட்ட ஆற்று நீர் மாதிரிதான் அவர்கள். மறுபடியும் மீளவே முடியாது அவர்களால்!” என்று ஒவ்வொரு கட்டத்திலும் மஞ்சுளா ஆனந்தனிடம் சுட்டிக் காட்டியது மதில் சுவரில் மோதித் திரும்பும் பேச்சுக் குரல்போல அவன் மனத்தில் எதிரொலித்தது. —

"குஷ்டம்! சே! எவ்வளவு முட்டாள்தனம் செய்து விட்டோம்! காதலோடு நிற்காமல் காமம் வரை போயிருந்தால் அவள் தொடையில் உள்ள குஷ்டம் தெரிந்திருக்கும். தெய்வீகமானதென்று வர்ணிக்கப்படும் காதல் எவ்வளவு போலித்தனமானதாக இருக்கிறது” ஆனந்தனின் உள்மனம் இப்படியும்

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/39&oldid=1549837" இலிருந்து மீள்விக்கப்பட்டது