பக்கம்:மிஸஸ். இராதா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மஞ்சுளா இப்போது தனிமரம். பூத்துப் புளகாங்கிதத்துடன் காற்றில் அசைந்து மணம் பரப்பும் பன்னீர் மரத்தைப் போல் அவள் அழகு அந்தப் புதுப்பட்டணம் முழுதும் பரவியிருந்தது, மீண்டும் அருள்மலர் கான்வெண்ட்டுக்குப் போக அவளுக்குக் கூச்சம். திருமணமாகி ஒரு நாள் மணப்பெண்ணாக இருந்தவளை, அந்தக் கான்வெண்ட் ஏற்றுக் கொள்ளுமோ கொள்ளாதோ என்ற அச்சம் வேறு அவளை அலைக்கழித்தது.

“பகைமையை பகைமையால் வெல்ல முடியாது; அன்பினலேதான் பகைமையைத் தனியவைக்க முடியும்” என்று கூறும் கருணைமிக்க மதர்கள் கூட ஏற்றுக்கொள்ளத் தகுதியற்றவளாக ஆகிவிட்டேனே என்ற துயரம் மஞ்சுளாவை அடிக்கடி திகிலடைய வைத்தது.

“யாரையும் நிந்திக்காத நான் யாரிடமும் துவேஷம் காட்டாத நான் எவர் பொருளையும் அபகரிக்காத நான் இப்படி மொட்டாக இருக்கும் போதே வெதும்பிப்போய் விட்டேனே இதற்கெல்லாம் காரணம் யார்? தர்மம் நின்று கொல்லலாம்; அந்தத் தத்துவம் உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனல் பசிக்கும் போது சோறு கிடைக்காமல், பசியால் இறந்து நாற்றமெடுத்த பிணமான பின்பு பாலும் சோறும் கிடைத்தால் யார் சாப்பிடப்போகிறார்கள்” மஞ்சுளாவின் மனத்தில் ஆடிமாதத்துக்காற்றைப் போல இந்தக் கேள்விகள் சுழன்று சுழன்று அடித்தன.

பெண்கள் என்னதான் புலன்களை அடக்கிக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தாலும், உணவு கொள்வதில் நிதானமுள்ளவர்களாக வாழ்ந்தாலும், இன்பங்களுக்காக மட்டும் வாழாமல் ஒரு இலட்சியத்திற்காக வாழ்பவர்களானலும் அவர்கள் வாழ்க்கையில் புயலடிக்கும்போது, சாகப்போகும் நேரத்தில் புலியைக்கூட தன் கொம்பால் குத்திப் பார்த்து விடுவோம் என்று நினைக்கும் மானைப்போல் வீறிட்டெழுந்து விடுகிறார்கள். கூச்சமுள்ள பெண்கூட கோயிலுக்கு ஒடி மண்ணை வாரித்துாற்றுகிறாள்; குமரிப் பெண்கூட குமுறி அழுது உரக்க பேசிவிடுகிறாள். அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் வாழும் பெரிய இடத்துப் பெண்கள்கூட நாலு தெருக்களுக்குத் தெரியும்படி உணர்ச்சி

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/41&oldid=1550912" இலிருந்து மீள்விக்கப்பட்டது