பக்கம்:மிஸஸ். இராதா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசப்பட்டுப் பேசிவிடுகிறார்கள். மானின் போராட்டத்தைப் போல் இது பெண்ணின் இறுதிப்போராட்டம்.

அனாதையாகிவிட்ட நிரபராதியான மஞ்சுளா இனிமேல் எதற்காக வாழ்க்கை என்று இறந்துவிடத்தான் நினைத்தாள். ஆனால் அவளுடைய உள் ஒளி அவளை அந்தப் பாதைக்குப் போக விடாமல் பூட்டுப் போட்டுவிட்டது.

“மஞ்சுளா, கோவலன் இறந்ததும் கண்ணகி ஏன் தற்கொலை செய்துகொள்ளவில்லை? மீனாட்சி அம்மன் மீது பழியைப்போட்டு விட்டு பொற்றாமரைக் குளத்தில் குதித்து இறந்திருக்கலாம். அல்லது யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியே இருக்கும் வண்டியூர் தெப்பக்குளத்தில் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். முன்பின் தெரியாத ஊரிலே இருந்துகொண்டு, துக்கத்துக்கு மத்தியிலேயும் ஒரு நிதானத்துடன் கொழுந்துவிட்டெரிந்த கோபத்துக்கிடையேயும் சுயபுத்தியுடன் அநீதிக்குப் பாடம் கற்பிக்க கண்ணகி நினைக்கவில்லையா? படித்துப் பட்டம் பெறாத கண்ணகியே அவ்வளவு வைராக்கியத்தோடு இருந்திருக்கும்போது பி. ஏ. படித்த நீ உன்னை வதைத்த ஆனந்தனுக்குப் பாடம் கற்பித்துத்தான் ஆகவேண்டும்” என்ற சபதத்தை பிரகடனப்படுத்திவிட்டது. ஒரு நீண்ட பெருமூச்சோடு தனக்குத்தானே அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டாள். சமயம் வாய்க்கும்வரை ஈரோட்டிலுள்ள அவளுடைய சிற்றன்னை வீட்டில் தங்கியிருப்பது என்ற தீர்மானத்தில் ஈரோடு புறப்பட்டாள் மஞ்சுளா!

ஈரோடு! மஞ்சுளாவின் சின்னம்மா செளந்தரத்தம்மாள் ஒரு விதவை. பிரபல ஜவுளிக்கடையான கொப்புடையம்மன் ஜவுளி ஸ்டோரில் சில்லறையாகப் புடவைகளை வாங்கிக் கொண்டுபோய் கிராமங்களில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரி அவள். செளந்தரத்தம்மாள் எப்படியும் ஒரு நாளைக்கு பத்துப்புடவைகளுக்குக் குறையாமல் விற்றுவிடுவாள். அதனால் கிடைக்கும் லாபத்தை வைத்து அவள் ஒண்டிக் குடித்தனம் நடத்திவந்தாள். அவளுக்குக் கொப்புடையம்மன் ஜவுளிக்கடையில் தனிச்சலுகைகள் உண்டு. முன்பணம் கட்டாமலே அவ-

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/42&oldid=1550913" இலிருந்து மீள்விக்கப்பட்டது